tamilni 623 scaled
இலங்கைசெய்திகள்

பாடசாலை மாணவர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை

Share

பாடசாலை மாணவர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை

பாடசாலை மாணவர்கள் இன்றிலிருந்து எதிர்வரும் முதலாம் திகதி (01.03.2024) வரை வெளிப்புற செயற்பாடுகளில் ஈடுபட கல்வி அமைச்சு தடை விதித்துள்ளது.

அதிக வெப்பமான காலநிலையை கருத்திற் கொண்டு இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அதிக வெப்பநிலையின் போது மாணவர்கள் வெளிப்புற விளையாட்டு பயிற்சி நடவடிக்கைகள் மற்றும் விளையாட்டு நிகழ்வுகளில் ஈடுபட வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் அறிவிக்குமாறு மாகாண மற்றும் பிராந்திய கல்வி அதிகாரிகளுக்கு ஏற்கனவே உரிய அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எதிர்காலத்தில் சுகாதார அமைச்சும், கல்வி அமைச்சும் பாடசாலைகளுக்கு வழங்கும் அறிவுறுத்தல்களுக்கு அமைய செயற்பட வேண்டும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை அதிக வெப்பமான நாட்களில் பாடசாலை மாணவர்கள் வெளிப்புற நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தவிர்க்குமாறு சுகாதார அமைச்சு அண்மையில் அறிவுறுத்தியிருந்தது.

இது தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள அறிவித்தலில், அதிக வெப்பநிலை நிலவும் நாட்களில் இல்ல விளையாட்டு போட்டிகள் மற்றும் பயிற்சிகளை நடத்துவதை தவிர்க்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

Share
தொடர்புடையது
22 3
செய்திகள்இலங்கை

அயதுல்லா அலி கமேனியின் மறைவு: கொழும்பிலுள்ள ஈரானிய தூதரகத்தில் அமைச்சர் விஜித ஹேரத் இரங்கல்!

ஈரான் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மறைவு குறித்து இலங்கை அரசாங்கம் மற்றும் மக்களின்...

20 2
உலகம்செய்திகள்

மில்லியன் கணக்கான மக்கள் திரள்வர் என எதிர்பார்ப்பு: அயதுல்லா அலி கமேனியின் இறுதிச் சடங்கு ஒத்திவைப்பு!

அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களில் கொல்லப்பட்ட ஈரானின் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனியின்...

19 1
செய்திகள்உலகம்

ஈரான் மீதான அமெரிக்க – இஸ்ரேலிய தாக்குதல்: ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணைக் குழு கடும் கண்டனம்!

ஈரானில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை செய்து வரும் ஐக்கிய நாடுகள் சபையின்...

18 3
செய்திகள்உலகம்

ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதல் சரியானது: அமெரிக்க வெளிவிவகாரக் குழுத் தலைவர் பிரையன் மாஸ்ட் அதிரடி!

அல்ஜெசீரா ஊடகத்திற்கு வழங்கிய பிரத்யேக நேர்காணலில், அமெரிக்கப் பிரதிநிதிகள் சபையின் வெளிவிவகாரக் குழுத் தலைவர் பிரையன்...