பெருந்தொகை நிதி முறைகேடுகளில் சிக்கிய நிறுவனங்கள்
நிதி முறைகேடுகளில் ஈடுபட்டதாக அடையாளம் காணப்பட்ட 12 நிறுவனங்கள் மீது குற்றப்புலனாய்வுத் திணைக்களம் கணக்காய்வுகளை மேற்கொள்ளும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு இறைவரி ஆணையாளர் நாயகம் நாடாளுமன்றத்தின் நிதிக் குழுவிடம் சமர்ப்பித்த அறிக்கையில் இது குறித்து தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, ஆறு நிறுவனங்கள் தொடர்பில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட கணக்காய்வு விசாரணையின் கீழ் 318 கோடி ரூபாவை மேலதிக வரிகளாக அரசாங்கம் அறவிட நேர்ந்துள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் கூறியுள்ளார்.