ரணில் பிறப்பித்துள்ள கடுமையான உத்தரவு
அரச செலவினங்களைக் கட்டுப்படுத்துவதற்கும் புதிய அரசாங்க வருமானத்தை ஈட்டுவதற்கும் முறையான வழிமுறைகள் உடனடியாக அறிமுகப்படுத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.
நாட்டை கட்டியெழுப்புவதற்கு நிதி ஒழுக்கம் இன்றியமையாதது என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் செலவிடும் ஒவ்வொரு ரூபாவிற்கும் அதிகபட்ச பெறுமதி பெறப்பட வேண்டும் எனவும், ஆனால் அது பெரும்பாலும் அரசாங்க செலவீனத்தில் இடம்பெறுவதில்லை எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசாங்கம் வருமானத்தை மறந்துவிடுவது மாத்திரமன்றி, எந்தவொரு பயனும் இல்லாத செயற்பாடுகளுக்காக அரசாங்க பணத்தை வரம்பற்ற முறையில் செலவிடுவதே நாட்டில் பொருளாதார நெருக்கடிக்கு வழிவகுத்துள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
புதிய அரச வருமானத்தை உருவாக்குவதற்கான உத்திகளை கண்டறிய நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கையை ஜனாதிபதி அலுவலகத்தில் கையளிக்கும் போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
- breaking news sri lanka
- cricket sri lanka
- english news
- Government Employee
- lk
- lka
- local news of sri lanka
- news from sri lanka
- news in sri lanka today
- Ranil Wickremesinghe
- sri lanka
- Sri Lanka Economic Crisis
- sri lanka latest news
- sri lanka news
- sri lanka news tamil
- sri lanka news tamil today
- sri lanka news today
- sri lanka news today tamil
- Sri lanka politics
- sri lanka sports
- sri lanka tamil news today
- sri lanka trending
- sri lankan news
- Srilanka Tamil News
- tamil lanka news
- tamil news sri lanka
- tamil sri lanka news
Leave a comment