rtjy 217 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கைக்குள் நுழைந்த 33 அமெரிக்க புலனாய்வாளர்கள்

Share

இலங்கைக்குள் நுழைந்த 33 அமெரிக்க புலனாய்வாளர்கள்

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் இடம்பெற்றதன் பின்னர் 33 அமெரிக்க புலனாய்வாளர்கள் நாட்டுக்கு வருகை தந்து விரிவான விசாரணைகளை மேற்கொண்டார்கள் என முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் சம்பவம் மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பான இரண்டாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே, அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

மேலும், முஸ்லிம் மக்களின் வாக்குகளை இழக்கக்கூடாது என்பதற்காகவே நல்லாட்சி அரசாங்கம் உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலை தடுக்கவில்லை எனவும், பயங்கரவாதி சஹ்ரானின் அடிப்படைவாத செயற்பாடுகள் தொடர்பாக 200 அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டும், சஹ்ரான் கைது செய்யப்படவில்லை எனவும் குற்றம் சுமத்தியுள்ளார்.

சபையில் தொடர்ந்து உரையாற்றிய அவர், ”இஸ்லாமிய அடிப்படைவாதியான பயங்கரவாதி சஹ்ரான் மீதும் அவரது தரப்பினர் மீதும் கடும் வைராக்கியம் எமக்குள்ளது.

அதேபோன்று குண்டுத்தாக்குதலுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் ஒத்துழைப்பு வழங்கியவர்கள் மீதும் கடுமையான வைராக்கியம் உள்ளது.

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் இடம்பெறுவதற்கு முன் 2019 ஏப்ரல் 20ஆம் திகதி பயங்கரவாதி சஹ்ரான் உறுதிப்பிரமாணம் செய்து அதனை 28 நிமிட காணொளியில் பதிவு செய்துள்ளார்.

நியூசிலாந்து பள்ளியில் படுகொலை செய்யப்பட்ட முஸ்லிம்களின் மரணத்துக்கு பழி தீர்ப்பதற்காக கத்தோலிக்க தேவாலயங்களில் குண்டுத்தாக்குதலை மேற்கொள்வதாகவும் முஸ்லிம்களை கொன்று முஸ்லிம் குழந்தைகளையும் பெண்களையும் விதவைகளாக்கி விட்டு இலங்கைக்கு வந்து விடுமுறையைக் கழிக்கும் வெளிநாட்டவர்களை கொல்வதற்காகவுமே ஹோட்டல்களில் தாக்குதல் மேற்கொள்வதாகவும் சஹ்ரான் உட்பட அடிப்படைவாதிகள் தமது உறுதிமொழியில் குறிப்பிட்டுள்ளார்கள்.

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுக்கள் மற்றும் நாடாளுமன்ற தெரிவுக் குழுக்கள் சமர்ப்பித்த அறிக்கைகளில் எவ்விடத்திலும் அரசியல் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த தாக்குதல் இடம்பெற்றதாக குறிப்பிடப்படவில்லை.

குண்டுத்தாக்குதல் தொடர்பாக தற்போது எதிர்தரப்பினர் சர்வதேச விசாரணைகளை கோருகிறார்கள். உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலால் 5 அமெரிக்க பிரஜைகள் உயிரிழந்துள்ளார்கள்.

அதன்படி அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குண்டுத்தாக்குதல் இடம்பெற்றதன் பின்னர் 33 அமெரிக்க நிபுணர்கள் நாட்டுக்கு வருகை தந்து விரிவான விசாரணைகளை மேற்கொண்டார்கள்” என தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பின்னணி தொடர்பிலும், அதனை விசாரணை செய்ய அமெரிக்க புலனாய்வாளர்கள் இலங்கைக்கு வருகை தந்தமை தொடர்பிலும் கடந்த 12.09.2023 அன்று எமது ஊடகத்தின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் விரிவாக ஆராயப்பட்டிருந்தது.

குறித்த ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருந்த பிரித்தானியாவின் இராணுவ ஆய்வாளர் கலாநிதி அரூஸ் இந்த விடயங்களை தெளிவுபடுத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
articles2FVR2hd2cLIcHfFF66K3BB
செய்திகள்அரசியல்இலங்கை

மலையகமே எமது தாயகம்; வடக்கு, கிழக்குக்குச் செல்லத் தயாரில்லை – சபையில் வேலுசாமி ராதாகிருஷ்ணன் எம்.பி. முழக்கம்!

மலையக மக்கள் தமது தாயகமாக மலையகத்தையே கருதுவதாகவும், அங்கிருந்து இடம்பெயர்ந்து வடக்கு அல்லது கிழக்கு மாகாணங்களுக்குச்...

images 4 5
செய்திகள்இலங்கை

சம்பா, கீரி சம்பா அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படலாம்: அமைச்சர் வசந்த சமரசிங்க எச்சரிக்கை!

‘டிட்வா’ (Ditwa) சூறாவளி காரணமாக நாட்டின் விவசாயத் துறை பாரிய பின்னடைவைச் சந்தித்துள்ளதாகவும், இதன் விளைவாக...

death ele
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

அநுராதபுரத்தில் சோகம்: காட்டு யானைத் தாக்குதலில் 48 வயது விவசாயி பலி; நண்பர்கள் உயிர் தப்பினர்!

அநுராதபுரம், தம்புத்தேகம பகுதியில் தனது விவசாய நிலத்தைப் பாதுகாக்கச் சென்ற விவசாயி ஒருவர் காட்டு யானைத்...

images 3 6
செய்திகள்அரசியல்இலங்கை

ஜனவரி 6 வரை பாராளுமன்றம் ஒத்திவைப்பு: உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்களுக்கு நீண்ட விடுமுறை!

இலங்கை பாராளுமன்றத்தின் அமர்வுகள் எதிர்வரும் ஜனவரி மாதம் 06 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில்,...