tamilnaadi 71 scaled
இலங்கைசெய்திகள்

நூற்றுக்கணக்கான உயிர்களை பலியெடுத்த தாக்குதல்! ஆதாரங்களை புறக்கணித்த அரசாங்கம்

Share

இலங்கை அரசாங்கத்தினால் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான புதிய ஆதாரங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்”அடுத்த மாதம் 21ம் திகதியுடன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று ஐந்து வருடங்கள் நிறைவடைகின்றது.

தாக்குதலில் பின்னர் நாட்டை ஆண்ட அரசாங்கங்கள் பல விசாரணைகளை முன்னெடுத்தன. ஆனால் இந்த விசாரணைகள் உயிர்த்தஞாயிறு தாக்குதல்கள் குறித்த அனைத்து விபரங்களையும் ஆராயவில்லை.

இதேவேளை உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான புதிய ஆதாரங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதுடன் வெளிப்படையான சுயாதீன விசாரணைகளிற்காக நாங்கள் விடுத்த வேண்டுகோள்களையும் மன்றாட்டங்களையும் இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது.

இந்நிலையில் இலங்கையின் மனித உரிமை நிலவரம் தொடர்பாக ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளரின் வாய்மொழி மூல அறிக்கையை நாம் வரவேற்கின்றோம்.”‘என தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
20 13
இலங்கைசெய்திகள்

இலங்கையில் மற்றுமொரு விபத்து – சிறுவர்கள், பெண்கள் உட்பட 37 பேர் காயம்

கண்டியில் நேற்று இரவு இடம்பெற்ற பேருந்து விபத்தில் 37 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பேருந்து...

19 12
இலங்கைசெய்திகள்

இலங்கை முழுவதும் உப்பு தட்டுப்பாடு – ஒரு கிலோ கிராம் 500 ரூபாய்..!

நாட்டில் உப்பு இறக்குமதியில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாக பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக உப்பு உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது....

18 12
உலகம்செய்திகள்

இலங்கை தமிழர்களுக்கு நடந்த கொடூரம்.. முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவிடத்தில் குண்டு வீச முயற்சி

தமிழ்நாடு சென்னையின் மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள, முன்னாள் முதல்வர்களான அண்ணாத்துரை மற்றும் கருணாநிதி ஆகியோரின் நினைவிடங்களை...

16 14
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபைக்கு உறுப்பினர்களை நியமிப்பதில் ஐ.தே.க.வுக்கு சிக்கல்

கொழும்பு மாநகர சபைக்கு உறுப்பினர்களை நியமிப்பதில் ஐக்கிய தேசியக் கட்சி பெரும் சிக்கலை எதிர்கொண்டுள்ளதாக அரசியல்...