இலங்கை அரசாங்கம் குறித்து ஐக்கிய நாடுகள் அமைப்பிடம் அதிருப்தி
இலங்கை அரசாங்கத்தின் செயற்பாடுகள் குறித்து ஐக்கிய நாடுகள் அமைப்பிடம், கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை அதிருப்தி வெளியிட்டுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் மற்றும் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இடம்பெற்ற சில மிலேச்சத்தனமான தாக்குதல்கள் தொடர்பில் வெளிப்படைத்தன்மையுடன் கூடிய சுயாதீன விசாரணைகள் முன்னெடுக்கப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவயைின் 55 ஆம் அமர்வுகளில் காணொளி தொழில்நுட்பத்தின் ஊடாக இணைந்து கொண்டு அரசாங்கத்தின் நடவடிக்கை குறித்து அதிருப்தி வெளியிட்டுள்ளார்.
மேற்குறிப்பிட்ட தாக்குதல்கள் குறித்த மெய்யான தகவல்களை வெளிப்படுத்த இலங்கை அரசாங்கம் தவறியுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த சம்பவங்கள் குறித்து கிரமமான விசாரணை நடத்தப்பட வேண்டுமென விடுக்கப்படும் கோரிக்கை நிராகரிக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவங்களுக்காக நீதி வேண்டி குரல் கொடுக்கும் தரப்புக்கள் சிறையில் அடைக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த சம்பவங்கள் தொடர்பில் பக்கச்சார்பற்ற நேர்மையான விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென கர்தினால், ஐக்கிய நாடுகள் அமைப்பிடம் கோரியுள்ளார்.