8 2
இலங்கைசெய்திகள்

ஈஸ்டர் தாக்குதலில் பிள்ளையானுக்கு நேரடி தொடர்பு..! வெளியாகும் திடுக்கிடும் தகவல்கள்

Share

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், ஈஸ்டர் தாக்குதலை முன்கூட்டியே அறிந்து வைத்திருந்தமை விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் பங்கேற்று கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளபடி, ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் குறித்து முறையான விசாரணை இன்னும் நடைபெற்று வருவதாக அவர் இதன்போது கூறியுள்ளார்.

அத்துடன், விசாரணைகளில் சில முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், தாக்குதல் தொடர்பான ஆரம்ப விசாரணைகளின் குறைபாடுகள் மற்றும் அலட்சியம் குறித்து தற்போது முறையான விசாரணை நடைபெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் தாக்குதலில் நேரடியாக ஈடுபட்ட தகவல்களும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
20 18
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காலி சிறைச்சாலைக்குள் போதைப்பொருள் வீசும் முயற்சி முறியடிப்பு: இளைஞர் ஒருவர் கைது!

காலி சிறைச்சாலையின் பாதுகாப்பை மீறி, அதன் மதிலுக்கு மேலால் போதைப்பொருள் மற்றும் தடைசெய்யப்பட்ட பொருட்களை உள்ளே...

19 16
செய்திகள்விளையாட்டு

92 ஆவது “புனிதர்களின் சமர்” கிரிக்கெட் போட்டி: வெற்றியின்றிச் சமநிலையில் நிறைவு!

கொழும்பு புனித ஜோசப் கல்லூரி மற்றும் பம்பலப்பிட்டி புனித பீட்டர்ஸ் கல்லூரி அணிகளுக்கு இடையிலான வரலாற்றுச்...

18 17
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நெலுவ மாதுகெட்ட பகுதியில் கிங் கங்கையில் சடலம் மீட்பு: பொலிஸார் விசாரணை!

காலி மாவட்டம், நெலுவ – மாதுகெட்ட பகுதியில் பாயும் கிங் கங்கையில் (Gin Ganga) மிதந்தவாறு...

17 18
செய்திகள்உலகம்

ஈரானின் நடன்ஸ் அணுசக்தி நிலையம் மீது மீண்டும் தாக்குதல்: சர்வதேச விதிகள் மீறப்பட்டுள்ளதாக ஈரான் குற்றச்சாட்டு!

ஈரானின் மிக முக்கியமான மற்றும் பிரதான அணுசக்தி நிலையங்களில் ஒன்றான நடன்ஸ் (Natanz) மீது மீண்டும்...