tamilni 103 scaled
இலங்கைசெய்திகள்

கோட்டாபயவை அரியணை ஏற்றிய மெல்கம்: அதிரவைக்கும் சனல்4

Share

கோட்டாபயவை அரியணை ஏற்றிய மெல்கம்: அதிரவைக்கும் சனல்4

இலங்கையின் ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்சவை நியமிக்க மேற்கொள்ளப்பட்ட சதித் திட்டத்தின் பின்னணியில், தாமும் இருப்பதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார முன்வைத்த குற்றச்சாட்டை கொழும்பு மறைமாவட்ட பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்ஜித் நிராகரித்துள்ளார்.

கோட்டாபய ராஜபக்சவை ஆட்சிக்கு கொண்டு வருவதற்கு கர்தினால் மெல்கம் ரஞ்ஜித் ஆண்டகையும் ஆதரவு வழங்கியதாக மனுஷ நாணயக்கார முன்வைத்த கருத்து குறித்து லங்காசிறியின் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே, அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவித்த அவர்,

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்காக நான் வேலை செய்ததாக ஒரு அரசியல்வாதி கடந்த காலங்களில் சர்ச்சையை பரப்பியிருந்தார்.

அவரும் ஒரு கத்தோலிக்க அமைச்சர் தான். அப்போது, நாம் அதனை எதிர்த்து கண்டனம் வெளியிட்டிருந்தோம். இந்த அரசியல்வாதியின் கருத்தை மற்றுமொரு அரசியல்வாதியும் இணைந்து சமூகத்தில் பரப்ப ஆரம்பித்தார்.
எனினும், நான் ஒரு அரசியல் தலைவர் அல்ல. கோட்டாபய ராஜபக்சவை நான் ஆதரித்ததாக குறித்த தரப்பினர் கருத்துக்களை முன்வைத்திருந்தனர்.

ஆனால் குறித்த தரப்பினர் தற்போது இலங்கை அரசாங்கத்தில் அமைச்சு பதவிகளை பெற்றுக் கொண்டுள்ளனர். இவ்வாறாக இலங்கையின் அரசியலில் ஈடுபடும் தரப்பினர் தற்போது அருவருப்புக்குரியவர்களாக மாறியுள்ளனர்.

இந்த நிலையில், இலங்கையை முன்னோக்கி கொண்டு செல்ல முடியாது. எமக்கு ஒரு சாதாரண சமூகம் தேவை. நீதி வேண்டும். எவரேனும் அதிகாரியொருவருக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டால், அவர் தாமாக பதவி விலகி சட்ட நடவடிக்கைகளுக்கு இடமளிக்க வேண்டும்.

எனினும், இலங்கையின் அரசியல்வாதிகள் விரட்டினாலும் போகமாட்டேன் என்கின்றவர்கள். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான சனல்-4 வின் ஆவணப்பதிவை அடிப்படையாக கொண்டு, கத்தோலிக்க திருச்சபை நான்கு முக்கிய கோரிக்கைகளை இலங்கை அரசாங்கத்திடம் முன்வைத்துள்ளது.

கத்தோலிக்க திருச்சபை இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில், சனல்-4 ஊடக நிறுவனம் குறித்து தவறான கருத்துக்களை முன்வைக்க வேண்டாம்.” என பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் கோரியுள்ளார்.

மேலும், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த ஆவணப்பதிவை வெளியிட சனல்-4 மேற்கொண்ட நடவடிக்கைக்கு கொழும்பு மறைமாவட்ட பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் நன்றி தெரிவித்துள்ளார்.

சனல்-4 ஊடகம் தொடர்பில் தவறான கருத்துக்களையும் விமர்சனங்களையும் வெளியிடுவதை விட்டுவிட்டு, குறித்த ஆவணப்பதிவில் வெளியிடப்பட்ட தகவல்களின் உண்மைத்தன்மையை மக்கள் அவதானிக்க வேண்டுமென அவர் கூறியுள்ளார்.

இந்த ஆவணப்பதிவு தொடர்பான விசாரணைகளை முன்னெடுப்பதற்காக மற்றுமொரு குழு அமைக்கப்படுவது பொது நிதியை வீணடிக்கும் செயலாக அமையுமென கர்தினால் மெல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

சனல்-4வின் ஆவணப்பதிவு தொடர்பில் விசேட நாடாளுமன்ற தெரிவு குழுவொன்று அமைக்கப்பட வேண்டுமென அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்திருந்த நிலையில், அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

மேலும், இலங்கை அரசாங்கத்திடம் நான்கு முக்கிய கோரிக்கைகளையும் அவர் முன்வைத்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சனல்-4 நிறுவனம் வெளியிட்டுள்ள ஆவணப்பதிவில் பெயரிடப்பட்டுள்ள நபர்கள் தொடர்பான பரந்துபட்ட மற்றும் சுயாதீன விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டுமெனவும் குறித்த விசாரணைகள் சுயாதீன சர்வதேச விசாரணை குழுவினால் முன்னெடுக்கப்பட வேண்டுமென அவர் கோரியுள்ளார்.

இலங்கை குற்றப்புலனாய்வு பிரிவின் அதிகாரிகள் குறித்த குழுவின் உறுப்பினர்களாக இருக்க வேண்டும் என்பதோடு, சனல்-4வின் ஆவணப்பதிவில் பெயரிடப்பட்டுள்ள அரசியல்வாதிகள், பொலிஸார் உள்ளிட்ட அனைவரும் விசாரணைக்குட்படுத்தப்பட வேண்டுமென கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
GettyImages 1202240221
செய்திகள்உலகம்

மார்ச் 20-ல் வெளியாகிறது புதிய BTS அல்பம் – உலகச் சுற்றுப்பயணத்திற்கும் தயார்!

உலகெங்கும் கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்டுள்ள தென் கொரியாவின் புகழ்பெற்ற கே-பாப் (K-pop) இசைக் குழுவான BTS,...

44520176 vijay33
செய்திகள்இந்தியா

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: த.வெ.க. தலைவர் விஜய்க்கு சி.பி.ஐ. அழைப்பாணை – ஜனவரி 12-ல் விசாரணை!

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க.) பிரசாரத்தின் போது...

gold 5
செய்திகள்இலங்கை

தொடர்ந்து உயரும் தங்கம்: இன்றும் பவுணுக்கு 3,000 ரூபாய் அதிகரிப்பு – புதிய விலைப் பட்டியல் இதோ!

இலங்கையில் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாகத் தொடர்ச்சியான ஏற்றத்தைக் கண்டு வருகின்றது. நேற்று (05)...

1739116331 energy min
இலங்கைஏனையவைசெய்திகள்

மூன்று ஆண்டுகளில் 30% கட்டணக் குறைப்பு: நாடாளுமன்றத்தில் அமைச்சர் குமார ஜயகொடி உறுதி!

வாக்குறுதியளித்தபடி மூன்று ஆண்டுகளுக்குள் மின்சாரக் கட்டணத்தை மூன்றில் ஒரு பங்காகக் குறைக்கும் இலக்கை நோக்கி அரசாங்கம்...