28 7
இலங்கைசெய்திகள்

திருக்கோணேஸ்வரர் ஆலயத்தை பௌத்தமயமாக்க கிழக்கு ஆளுநர் முயற்சி : கஜேந்திரன் எம்.பி குற்றச்சாட்டு

Share

திருக்கோணேஸ்வரர் ஆலயத்தை பௌத்தமயமாக்க கிழக்கு ஆளுநர் முயற்சி : கஜேந்திரன் எம்.பி குற்றச்சாட்டு

திருக்கோணேஸ்வரர் ஆலயத்தை சிங்கள பௌத்தமாக்க எடுக்கப்படும் முயற்சிகளுக்கு ஆதரவாக கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமானும் இணைந்து செயற்படுவதாக தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

திருக்கோணேஸ்வரர் ஆலய விவகாரம் தொடர்பில் நேற்று (15) ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், ”திருக்கோணேஸ்வரம் என்பது சைவ மக்களுடைய வரலாற்று தொன்மை மிக்க ஒரு அடையாளம். தமிழர்களின் பழமையான வரலாற்றை பறை சாற்றும் அடையாளமாக விளங்குகின்றது.

அவ்ஆலயத்தை முழுமையாக கையகப்படுத்தி சிங்கள பௌத்த அடையாளமாக மாற்ற வேண்டும் என பேரினவாதிகள் கங்கணம் கட்டி செயற்பட்டு வருகின்றனர்.

திருக்கோணேஸ்வரர் ஆலய நிர்வாகத்தினரும், அதன் மக்களும் அதற்கு எதிராக கடுமையதாக போராடி வருகிறார்கள்.

இவ்வாறான நிலையில் அந்த ஆலய நிர்வாக சபைக்குள் குழப்பங்களை ஏற்படுத்தி ஆலய நிர்வாக சபை மீது சேறுபூசி அந்த நிர்வாக சபையை அகற்றி விட்டு ஒரு இடைக்கால நிர்வாக சபையை அமைப்பதற்கான சதி முயற்சிகள் நடைபொறுகிறது.

அண்மைக் காலத்தில் அந்த ஆலய நிர்வாகத்தில் திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகவும், முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாகவும் பூதாகரமாகபப்டுத்தப்பட்டுள்ளது. ஆலய பக்தர்கள் மற்றும் பொது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தும் முகமாக பரப்புரைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

ஆளுநருடைய அலுவலகத்தால் இவ்வாறான செய்திகளை பரப்பி அவதூறைகளை ஏற்படுத்தி ஆலய நிர்வாகத்தினருக்கு நெருக்கடியை கொடுத்து அவர்கள் தாமாகவே அதில் இருந்து விலகிச் செல்கின்ற அல்லது பொது மக்களை தூண்டி அவர்களை அகற்றிவிட்டு அதனை கையகப்படுத்துவதற்கான முயற்சிகளை ஆளுநர் அலுவலம் செய்து கொண்டிருக்கின்றது.

மிக நீண்ட காலமாக நிர்வாக சபை கட்டுக்கோப்புடன் செயற்பட்ட நிலையில் அதனைக் குழப்பி அதற்குள் நுழைய அரச தரப்பு தீவிரமாக முயல்கிறது.
\
அந்த முயற்சியின் ஒரு கருவியாக ஆளுநர் செந்தில் தொண்டமான் இருப்பது மிகவும் கவலைக்குரிய விடயம்.

இந்த நிர்வாக சபையை கலைத்து புதிய இடைக்கால நிர்வாக சபையை ஏற்படுத்த ஆளுநர் எடுக்கும் முயற்சிகளை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம். இடைக்கால நிர்வாகத்தில் தன்னையும் ஒரு அங்கத்தவராக இணைக்க வேண்டும் என அவர் அழுத்தங்களை பிரயோகிப்பதாகவும் ஆலய நிர்வாகத்தாலும், வழிபாட்டு சபையாலும் குற்றம் சாட்டப்பட்டுளடளது.

ஆலய நிர்வாகத்திற்கு தெரியாது பாதுகாப்பு விதிமுறைகளுக்கு முரணாக ஆளுநர் அலுவலகத்தால் கூட்டம் கூட்டப்பட்டு அது குழப்பத்தில் முடிவடைந்தது.

திருகோணேஸ்வரர் ஆலயத்தை கையகப்படுத்துவதற்கும், அதனை சீரழிப்பதற்கும் ஆளுநர் முன்னெடுக்கும் முயற்சிகளை உடனடியாக நிறுத்த வேண்டும்.

அரசாங்கத்தின் முகவராகவும், அரசாங்கத்தின் பிரதிநிதியாகவும் இருந்து கொண்டு அவர் நிர்வாகத்தில் நுழைவதை ஏற்க முடியாது. சட்டவிரோதமாக அமைக்கப்படும் விகாரைகளை தடுத்து நிறுத்தி தமிழ் மக்களின் இருப்பை காப்பாற்ற முதுகெலும்பு அற்ற ஆளுநர் ஆலயத்தை தாரை வார்க்க எடுக்கும் முயற்சிகளை ஏற்க முடியாது.

ஆளுநர் அங்கு இடம்பெற்ற திருட்டு சம்பவம் தொடர்பில் கூறும் கருத்துக்கள் கூட அடிப்படையற்ற கருத்துக்கள். அது தொடர்பில் உண்மையான விசாரணை தேவை. தொல்பொருள் திணைக்களத்தை வலிந்து இழுக்கும் செயற்பாட்டை ஆளுநர் செய்யக் கூடாது“ எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
WhatsApp Image 2024 08 02 at 17.13.20
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

பெற்றோருக்குச் சுமையற்ற, நவீன கல்வி முறை – ஜனாதிபதி அநுர குமார!

பெற்றோருக்குப் பொருளாதாரச் சுமையையும், பிள்ளைகளுக்குத் துயரத்தையும் தராத ஒரு புதிய கல்வி முறையை நாட்டில் உருவாக்கப்போவதாக...

images 2026 01 03t094503424 26244
உலகம்செய்திகள்

Grok AI-க்கு உலகளாவிய தடை மற்றும் கட்டுப்பாடுகள்: ‘டீப்ஃபேக்’ விவகாரத்தால் ஈலான் மஸ்க் பணிந்தார்!

ஈலான் மஸ்க்கிற்குச் சொந்தமான ‘Grok’ செயற்கை நுண்ணறிவுத் தளம், பெண்கள் மற்றும் சிறுவர்களின் புகைப்படங்களைத் தவறாகச்...

MediaFile 8 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நிலக்கரி டெண்டர் ஊழல் நிறைந்தது: அமைச்சர் குமார ஜயகொடிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி.சானக்க சவால்!

தற்போதைய அரசாங்கத்தின் நிலக்கரி விலைமனுக் கோரலில் (Coal Tender) பாரிய ஊழல் இடம்பெற்றுள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ள...

1500x900 44538875 ipl2026
விளையாட்டுசெய்திகள்

ஐ.பி.எல் 2026: சின்னசுவாமி மைதானத்திலிருந்து வெளியேறுகிறது ஆர்.சி.பி! – ராஜஸ்தான் அணியும் இடம் மாறுகிறது.

ஐ.பி.எல் 2026 தொடரில் முன்னணி அணிகளான ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ்...