23 16
இலங்கைசெய்திகள்

சாணக்கியன் ஒரு தௌவல்: ஈஸ்வரபாதம் சரவணபவன் தெரிவிப்பு

Share

சாணக்கியன் ஒரு தௌவல்: ஈஸ்வரபாதம் சரவணபவன் தெரிவிப்பு

சாணக்கியன் ஒரு தௌவல். அவருக்கு ஆட்களை கவரக்கூடிய கவர்ச்சித் தன்மை உண்டு. அதை சரியாக பாவித்தால் ஒரு தலைவராக வரலாம் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் (Jaffna) – வட்டுக்கோட்டையில் உள்ள அவரது அலுவலகத்தில் நேற்று (23) ஊடகவியலாளர் சந்திப்பு நடைபெற்றுள்ளது.

இதன்போது ஊடகவியலாளர் ஒருவர் “இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற வேட்பாளரான சிறிநேசன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் கடந்த ஜனாதிபதி தேர்தலின் வேட்பாளரான பா.அரியநேத்திரனை பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடுத்தவோ, கட்சியின் நிகழ்வுகளில் ஈடுபடுத்தவோ கூடாது.

அவர் தமிழரசுக் கட்சியால் ஒழுக்காற்று நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டு, கட்சியில் இருந்து இடைநிறுத்தப்பட்டவர். அவரை கட்சியில் இருந்து நிரந்தரமாக நீக்க வேண்டிய சூழ்நிலையும் ஏற்படும்.

எனவே, அவரை பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடுத்த கூடாது என சாணக்கியன் கூறியுள்ளார். இது குறித்து தங்களது கருத்து என்ன என வினவியவேளை அவர் மேற்க்ணடவாறு குறிப்பிட்டுள்ளார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், “பிரசார மேடையில் யாரும், யாருக்காகவும் பேசலாம், யாருக்கும் ஆதரவு வழங்கலாம். இன்று சிறிநேசனும் சாதாரண ஆள் தான், சாணக்கியனும் சாதாரண ஆள் தான், நானும் சாதாரண ஆள் தான். எனக்கு ஆதரவாக கடந்த காலங்களில் விடுதலை போராளிகள் மேடையேறி பேசினார்கள், இனியும் பேசுவார்கள்.

அந்தவகையில் அரியநேத்திரன் யாருக்கு ஆதரவாகவும் பேசலாம். எனவே கட்சிக்கும், ஒழுக்காற்று நடவடிக்கைக்கும், பிரசார நடவடிக்கைகளுக்கும் சம்பந்தம் இல்லை. சிறீதரன் மீதும் ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்வதற்காக விளக்கம் கோரி கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

எனக்கும் அனுப்பப்பட்டுள்ளது. இதெல்லாம் இனி வருடக்கணக்கில் கிடப்பில் போடப்படும். ஏனென்றால் இதற்கு 10 வருடங்களுக்கு முன்னர் சுமந்திரனுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை கொண்டு வரப்பட்டது. தமிழரசு கட்சியில் இருக்கின்ற நிர்வாகிகள் தமக்கு ஏற்ற நேரத்தில் ஒரு வருடத்திலும் முடிப்பார்கள், 10 வருடத்திலும் முடிப்பார்கள்.

எனவே, இவற்றை எல்லாம் பொருட்படுத்தக் கூடாது. அரியநேத்திரனுக்கு எல்லா ஜனநாயக உரிமைகளும் உள்ளன. எந்த மேடையிலும் ஏறி யாருக்கு ஆதரவாகவும் பிரசாரம் செய்யலாம், இது கட்சி மேடை அல்ல” என தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
world 202
செய்திகள்உலகம்

மத்திய கிழக்கு அமைதி முன்னெடுப்பு: உலக நாடுகளின் பாராட்டைப் பெறும் பாகிஸ்தானின் மத்தியஸ்தப் பங்கு!

மத்திய கிழக்கில் அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே நிலவும் போர் பதற்றத்தைத் தணிக்கும் முயற்சிகளில் பாகிஸ்தான் ஒரு...

world 201
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அமைதிப் பேரணிக்காக இலங்கை வரும் ‘அலோகா’: விமானத்தில் பயணிகளுடன் பயணிக்கச் சிறப்பு அனுமதி!

இலங்கையில் எதிர்வரும் ஏப்ரல் 21-ஆம் தேதி முதல் 28-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள சர்வதேச “அமைதிப்...

world 200
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வாகன இலக்கத் தகடுகளில் மாற்றமா? பொலிஸார் விடுத்துள்ள கடும் எச்சரிக்கை!

இலங்கையில் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தினால் அங்கீகரிக்கப்பட்ட தரநிலைகளுக்குப் புறம்பாக, தரமற்ற மற்றும் வர்ணமயமான வாகனப் பதிவு...

world 197
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கைக்கு ஒரு பேரல் எண்ணெய் $286: உலகளாவிய எரிசக்தி நெருக்கடியில் சிக்கிய தீவு தேசம்!

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் ஏற்பட்டுள்ள உலகளாவிய எண்ணெய் நெருக்கடி, காகித வர்த்தகத்தைத் தாண்டி...