பதவியைக் கைப்பற்ற துமிந்த கடும் போட்டி!

rtjy 243

பதவியைக் கைப்பற்ற துமிந்த கடும் போட்டி!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து தயாசிறி ஜயசேகர நீக்கப்பட்டதைத் தொடர்ந்து அந்தப் பதவியைக் கைப்பற்றுவதற்கு கடும் போட்டி இடம்பெற்று வருகின்றது.

அதில் முன்னணியில் இருப்பவர் கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளர் துமிந்த திசாநாயக்க.

துமிந்த பொதுச்செயலாளராக இருந்தபோது தான் கட்சிக்குள் அவருக்கு எதிராகப் பிரச்சினை ஏற்பட்டு அவரிடம் இருந்து பதவி பறிக்கப்பட்டு அது தயாசிறிக்கு வழங்கப்பட்டது.

இப்போது அந்தப் பதவியை மீண்டும் கைப்பற்றுவதற்குத் துமிந்த முயற்சி செய்து வருகிறார் என்று அறியமுடிகின்றது.

இப்போது சு.கவின் தலைவர் மைத்திரியோடு துமிந்த நெருக்கமாக இருப்பதால் ஒருவேளை இது சாத்தியப்படலாம் என்கின்றது அக்கட்சி வட்டாரம்.

Exit mobile version