அடுத்த ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கும் டலஸ்
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சுதந்திர மக்கள் பேரவையின் ஜனாதிபதி வேட்பாளராக நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெருமவை முன்னிருத்த தீர்மானித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் லலித் எல்லாவல தெரிவித்துள்ளார்.
அண்மையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், சுதந்திர ஜனதா சபை தனக்கு ஆதரவளிக்கத் தயாராக உள்ளவர்களுடன் கூட்டணி அமைக்கத் தயாராக இருப்பதாகவும் இத்தொடர்பில் எதிர்க்கட்சிகளுடன் கலந்துரையாடுவதற்குத் தயார் என நாடாளுமன்ற உறுப்பினர் லலித் எல்லாவல தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறியுள்ளதாவது, நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும ஊழலற்றவர், அவர் நாட்டின் ஜனாதிபதி அல்லது பிரதமர் பதவியை வகிக்க மிகவும் பொருத்தமானவர்.
எனவே அவரை நாட்டின் ஜனாதிபதியாக நியமிக்க எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய வேண்டும்.
நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு சுதந்திர மக்கள் பேரவை மிகவும் வெற்றிகரமான வேலைத்திட்டத்தை கட்டியெழுப்பியுள்ளதாகவும், அதற்கேற்ப நாட்டில் ஊழல் மோசடிகளை தடுக்கும் வகையில் அரசியலமைப்பை மாற்ற தயாராகவுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
- breaking news sri lanka
- cricket sri lanka
- Dullas Alahapperuma
- english news
- Jaffna News
- lanka tamil
- news from sri lanka
- news in sri lanka today
- President of Sri lanka
- sirasa news
- sri lanka
- sri lanka latest news
- sri lanka news
- sri lanka news tamil
- sri lanka news today
- Sri lanka politics
- sri lanka sports
- sri lanka tamil news live
- sri lanka tamil news today
- sri lanka tamil news today 2023
- sri lanka trending
- sri lankan news
- Sri Lankan political crisis
- tamil lanka news
- Tamil news
- tamil sri lanka news
- tv news
Leave a comment