tamilni 225 scaled
இலங்கைசெய்திகள்

தற்காலிக ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பவர்களுக்கு அறிவிப்பு

Share

தற்காலிக ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பவர்களுக்கு அறிவிப்பு

மோட்டார் போக்குவரத்து துறையில் அச்சிடுவதற்காக குவிந்துள்ள ஓட்டுனர் உரிமங்களின் எண்ணிக்கை, ஒன்பது லட்சத்தை தாண்டியுள்ளது.

அட்டை பற்றாக்குறை மற்றும் போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லாததால், இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.

அந்நியச் செலாவணி பற்றாக்குறையால் ஒரு வருடத்திற்கு முன், ஓட்டுனர் உரிமம் அச்சிட, அட்டைகளை இறக்குமதி செய்ய முடியாத நிலை காணப்பட்டது.

பின்னர், ஆஸ்திரியாவிலிருந்து 10 லட்சம் அட்டை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.

சிப் கொண்ட ஐந்து இலட்சம் அட்டைகளும், QR குறியீடு கொண்ட ஐந்து லட்சம் அட்டைகளும் இறக்குமதி செய்யப்பட்ட போதிலும், மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் ஓட்டுநர் உரிம அலுவலகத்தினால் தினசரி அச்சிடப்படும் அட்டைகளின் எண்ணிக்கை 2000ஆகும்.

அங்கு இரண்டு இயந்திரங்கள் மட்டுமே நல்ல நிலையில் உள்ளன. சிப் உள்ள 5 லட்சம் அட்டைகளும் அச்சடிக்கப்பட்டுள்ளதால், QR குறியீடு கொண்ட அட்டைகளை அச்சடிக்கும் பணி நேற்று முதல் ஆரம்பித்துள்ளது.

இம்மாதம் மேலும் மூன்று அச்சு இயந்திரங்கள் பெறப்படவுள்ளதால், அடுத்த மாதம் முதல் நாளொன்றுக்கு 1000 தொடக்கம் 7000 சாரதி அனுமதிப்பத்திரங்கள் அச்சிடப்பட உள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க தெரிவித்துள்ளார்.

தற்போது குவிந்து கிடக்கும் அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் சாரதி அனுமதிப்பத்திரம் ஆறு மாதங்களில் வழங்க எதிர்பார்க்கப்படுவதாக ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.

மேலும், தற்போது தற்காலிக ஓட்டுனர் உரிமம் பெற்றவர்களின் உரிமம் காலாவதியாகி இருந்தால், ஓட்டுநர் உரிம அட்டை இன்னும் கிடைக்கவில்லை என்றால், மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் அலுவலகம் அல்லது மாவட்ட அலுவலகங்களில் காலத்தை நீட்டிக்க முடியும் என குறிப்பிடப்படுகின்றது.

Share
தொடர்புடையது
world 202
செய்திகள்உலகம்

மத்திய கிழக்கு அமைதி முன்னெடுப்பு: உலக நாடுகளின் பாராட்டைப் பெறும் பாகிஸ்தானின் மத்தியஸ்தப் பங்கு!

மத்திய கிழக்கில் அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே நிலவும் போர் பதற்றத்தைத் தணிக்கும் முயற்சிகளில் பாகிஸ்தான் ஒரு...

world 201
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அமைதிப் பேரணிக்காக இலங்கை வரும் ‘அலோகா’: விமானத்தில் பயணிகளுடன் பயணிக்கச் சிறப்பு அனுமதி!

இலங்கையில் எதிர்வரும் ஏப்ரல் 21-ஆம் தேதி முதல் 28-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள சர்வதேச “அமைதிப்...

world 200
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வாகன இலக்கத் தகடுகளில் மாற்றமா? பொலிஸார் விடுத்துள்ள கடும் எச்சரிக்கை!

இலங்கையில் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தினால் அங்கீகரிக்கப்பட்ட தரநிலைகளுக்குப் புறம்பாக, தரமற்ற மற்றும் வர்ணமயமான வாகனப் பதிவு...

world 197
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கைக்கு ஒரு பேரல் எண்ணெய் $286: உலகளாவிய எரிசக்தி நெருக்கடியில் சிக்கிய தீவு தேசம்!

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் ஏற்பட்டுள்ள உலகளாவிய எண்ணெய் நெருக்கடி, காகித வர்த்தகத்தைத் தாண்டி...