24 6615f9368b543
இலங்கைசெய்திகள்

இலங்கையில் தெய்வமாக மாறிய சாரதி : உயிர் தப்பிய 50 பயணிகள்

Share

இலங்கையில் தெய்வமாக மாறிய சாரதி : உயிர் தப்பிய 50 பயணிகள்

நாவலப்பிட்டி பேருந்து சாரதி நொடிப்பொழுதில் எடுத்த முடிவால் 50 பேரின் உயிர்கள் காப்பாற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தொலொஸ்பாகேயிலிருந்து நாவலப்பிட்டி நோக்கிச் சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று வீதிக்கு அருகில் உள்ள மலையில் மோதி நேற்று விபத்துக்குள்ளானது.

பேருந்தில் பயணித்த மூன்று பாடசாலை மாணவர்கள், பயணிகள் ஐவர் மற்றும் சாரதி ஆகியோர் காயமடைந்து நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.

நாவலப்பிட்டி தொலொஸ்பாகே பிரதான வீதியில் நாவலப்பிட்டி உடுவெல்ல பிரதேசத்தில் நேற்று காலை 6.45 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து பயணித்துக் கொண்டிருந்த போது, ​​பேருந்தின் முன்பக்கத்தில் இருந்து பலத்த சத்தம் கேட்டதாகவும் அதேநேரம் பேருந்து சாரதியின் கட்டுப்பாட்டை இழந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

எனினும் சாரதி தனது உயிரை பணயம் வைத்து பேருந்தை மலையின் மீது மோதச் செய்து நிறுத்துவதற்கு கடும் முயற்சி மேற்கொண்டுள்ளார்.

அதற்கமையவே மலையில் மோதி பேருந்து நிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பேருந்து விபத்துக்குள்ளான வீதியின் மறுபுறம் சுமார் 300 மீற்றர் உயரமான மதில் சுவருடன் கூடிய பள்ளம் காணப்படுவதாகவும், பேருந்தின் சாரதி பேருந்தை பள்ளத்தில் விழ விடாமல் தடுத்து பெரும் விபத்தை தடுத்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

பேருந்து விபத்துக்குள்ளான போது, ​​குறித்த பேருந்தில் பாடசாலை மாணவர்கள் உட்பட சுமார் ஐம்பது பேர் பயணித்துள்ளனர்.

சாரதி தனக்கு ஆபத்து ஏற்படும் என தெரிந்தும் மலையில் மோதி பேருந்தை நிறுத்தியிருக்கவில்லை என்றால் பாரிய உயிர் சேதம் ஏற்பட்டிருக்கும் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...