tamilni 402 scaled
இலங்கைசெய்திகள்

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூல திருத்தம் தொடர்பான யோசனை!

Share

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூல திருத்தம் தொடர்பான யோசனை!

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை திருத்தங்களுடன் மீள் வரைவு செய்யும் வகையில், சட்ட வரைஞரை அறிவுறுத்தும் தீர்மானத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நீதி, சிறைச்சாலை நடவடிக்கைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்சவினால் இந்த தீர்மானம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக 27.02.2023 அன்று அமைச்சரவை கூட்டத்தின்போது, பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்குப் பதிலாக அறிமுகப்படுத்தப்படவுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் தொடர்பில் அரச வரைஞர் தயாரித்த வரைவு யோசனைக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.

எனினும் வரைவு சட்டமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சில உட்பிரிவுகளில் ஆர்வமுள்ள பல தரப்பினரால் முன்வைக்கப்பட்ட கருத்துக்களை கருத்தில் கொண்டு குறித்த வரைவு சட்டமூலத்திற்கு தேவையான திருத்தங்களை அறிமுகப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற கூட்டத்தில், ஏற்கனவே வரைந்த வரைவு யோசனையில் அங்கீகரிக்கப்பட்ட திருத்தங்களை இணைத்து, பயங்கரவாத எதிர்ப்பு யோசனையை மறுவடிவமைக்க சட்ட வரைஞருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
images 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வீழ்ச்சியடையும் கல்வித் தரம்: முல்லைத்தீவு வள்ளிபுனம் மகா வித்தியாலயத்தைப் பாதுகாக்கக் கோரிக்கை!

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்குட்பட்ட வள்ளிபுனம் மகா வித்தியாலயத்தில் நிலவும் பல்வேறு குறைபாடுகளை நிவர்த்தி செய்து,...

26 695661e2a824f
செய்திகள்அரசியல்இலங்கை

மில்கோ நிறுவன வரலாற்றில் சாதனை இலாபம்: ஊழியர்களுக்கு போனஸ் வழங்கினார் அமைச்சர் லால்காந்த!

இலங்கையின் மில்கோ (Milco) நிறுவனம் தனது வரலாற்றிலேயே மிக உயர்ந்த இலாபத்தைப் பதிவு செய்துள்ளதாக விவசாய,...

images 1
செய்திகள்இந்தியா

இந்தியாவிற்கு வருகிறது BTS! மும்பையில் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி – ஆர்மி ரசிகர்கள் உற்சாகம்!

உலகப் புகழ்பெற்ற தென்கொரிய இசைக்குழுவான BTS (Bangtan Boys), தங்களின் உலகளாவிய இசைப் பயணத்தின் (World...

gun shooting 1
செய்திகள்அரசியல்இலங்கை

2025-ல் 114 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள்: 60 பேர் பலி – பொலிஸார் அதிரடித் தகவல்!

கடந்த (2025) ஆண்டில் 114 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியதாகவும் அதில் 60 பேர் உயிரிழந்ததுடன்,...