அரசாங்கத்தின் உள்ளே ஓரினச் சேர்க்கையாளர்கள் இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்துள்ளார்.
தென்னிலங்கை தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,
“எந்த பொற்றோரும் தனது பிள்ளை ஓரினச் சேர்க்கையாளராக மாறுவதை விரும்பமாட்டார்கள். நாங்கள் பின்பற்றுவது இந்து – பௌத்தம் – இஸ்லாம் மதங்களாகும்.
இவற்றில் இதற்கு இடமில்லை. யாருக்காவது ஏதும் பிரச்சினை என்றால், நான் வைத்திய முறையில் தீர்வை வழங்குவோம்.
நாட்டை வீணாக்க முடியாது. வெளிநாட்டில் இருந்து ஆட்களை கொண்டு வந்து ‘LGBTQ’ படம் காட்ட முடியாது.
யாருடைய பிள்ளையும் நாசமாக நான் விடமாட்டேன். இந்த நாட்டை அமெரிக்காவாக மாற்ற வேண்டாம். அதை சட்டமாக்கி எதிர்கால சந்ததியை நாசமாக்க வேண்டாம்” எனக் கூறியுள்ளார்.