வன்னிப் பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபராக டி.பி.சந்திரசிறி

Sri Lanka police

வன்னி மாவட்டத்தின் புதிய பிரதிப் பொலிஸ்மா அதிபராக டி.பி. சந்திரசிறி இன்று காலை தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார் .

கொழும்பு போக்குவரத்து பிரிவில் பிரதிப் பொலிஸ்மா அதிபராக கடமையாற்றிய டி.பி. சந்திரசிறி, வன்னி மாவட்டத்தின் புதிய பொலிஸ்மா அதிபராக நியமனம் பெற்றுள்ள நிலையில், இன்று காலை புதிய பிரதிப் பொலிஸ்மா அதிபராக தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார் .

கடந்த திங்கட்கிழமை வன்னி பிராந்தியத்தில் பணியாற்றிய பிரதிப் பொலிஸ்மா அதிபர் லால் செனவிரத்தின ஓய்வு பெற்று சென்றார்.

இந்த நிலையில் இன்று காலை புதிய பிரதிப் பொலிஸ்மா அதிபராக கொழும்பு மாவட்ட போக்குவரத்துத் தொடர்பாடல் பிரிவு பிரதிப் பொலிஸ்மா அதிபராக கடமையாற்றி டி.பி. சந்திரசிறி தனது கடமைகளை பொறுப்பேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version