டக்ளசின் இறுதி முடிவு.. சிவீகேவை அழைக்கும் கருணா

1 5

நேற்றைய தினம் ஊடகங்களில் பெரும்பாலும் வெளியாகியிருந்த செய்திகளில், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி எடுக்கும் தீர்மானத்தை பொறுத்து தான் வன்னியில் அதனுடைய பிரதிபலிப்புக்கள் வெளிப்படும் என இலங்கை தமிழரசு கட்சியின் பதில் பொதுச் செயலாளர், எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தாக கூறப்பட்டது.

தமிழரசு கட்சியின் பதில் தலைலர், சிவீகே சிவஞானத்தின் வீட்டில் இடம்பெற்ற சந்திப்பில் ரெலோ கட்சியின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் ஊடக பேச்சாளர் சுரேன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

குறித்த சந்திப்பின் போது, தற்போது கஜேந்திரகுமார் கூட்டணியின் நிலைமைகள் தொடர்பிலும் அவர்களிடம் உள்ள கருத்துக்கள் தொடர்பிலும் செல்வம் அடைக்கலநாதன் உரையாடியதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், தற்போதைய சூழ்நிலையில், சுமந்திரனின் கூற்றுப்படி பெரும்பான்மை அடிப்படையில் ஆட்சி அமைப்போம் என செல்வம் அடைக்கலநாதன் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version