கிளிநொச்சிக்கு களவிஜயம் செய்த டக்ளஸ்
கிளிநொச்சி – இரணைமடு குளத்தின்கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ள சிறு போக செய்கைக்காண நீர் விநியோகத்தில், வீண்விரயமாக வெளியேறும் மேலதிக நீரை தடுத்து ஏனைய காணிகளை சேர்த்துக் கொள்வது தொடர்பில் ஆராயும் பொருட்டு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் கள விஜயம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தற்போது சிறுபோக செய்கைக்கான நீர் வினியோகத்தின் போது மேலதிகமான நீர் கழிவு வாய்க்கால்கள் ஊடாக வெளியேறி கடலைச் சென்றடைகின்றது.
இவ்வாறு வெளியேறுகின்ற நீரை தடுத்து ஏனைய காணிகளையும் உள்வாங்கி பயிர்செய்கைகளை விஸ்தரிப்பது தொடர்பில் குறித்த கள விஜயம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தின் பாரிய நீர்ப்பாசன குளமான இரணைமடு குளத்தின் புனரமைப்பு பணிகள் 2017 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டதுடன் அதன் நீர் கொள்ளளவு 36 அடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இக்குளத்தின் கீழுள்ள 21,985 ஏக்கர் நிலப்பரப்புக்கு மேலதிகமாக குமரபுரம் பரந்தன் கண்டாவளை ஆகிய பகுதிகளில் உள்ள மேலதிக காணிகளை இணைத்து நீர்ப்பாசனத் திட்டத்தின் கீழ் உள்ளீர்ககுமாறு கோரிக்கைகள் தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Leave a comment