திடீரென இஸ்ரேலை எச்சரித்த ட்ரம்ப்!

Untitled 1 Recovered Recovered 8

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தக்கூடாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ட்ரூத் சமூக வலைத்தளத்தில் இட்டுள்ள பதிவிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இஸ்ரேல் குண்டுகளை வீசினால் அது மிகப்பெரிய விதி மீறலாக கருதப்படும் எனவும் அவர் குறித்த பதிவில் விவரித்துள்ளார்.

அத்துடன், உங்கள் விமானிகளை வீட்டிற்கு அழைத்து வாருங்கள் எனவும் அவர் இஸ்ரேல் அரசாங்கத்திடம் கோரியுள்ளார்.

இதேவேளை, ட்ரம்பின் போர்நிறுத்த முன்மொழிவுக்கு ஒப்புக்கொள்வதாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்திருந்தார்.

அத்துடன், இஸ்ரேல் நடத்தும் தாக்குதல்களை தெஹ்ரான் நேரப்படி அதிகாலை 4 மணிக்கு முன்பு முடித்துக்கொண்டால் ஈரான் போர் நிறுத்தத்திற்கு உடன்படும் என ஈரான் தரப்பில் இருந்து அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version