இலங்கைக்கு கிடைத்துள்ள பல மில்லியன் டொலர்கள்

tamilnaadi 58

2024 ஜனவரியில் இலங்கையின் மொத்த ஏற்றுமதி வருமானம் 970.7 மில்லியன் அமெரிக்க டொலர்களாக கணக்கிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, இலங்கையில் விவசாய ஏற்றுமதி மூலமான வருமானம் அதிகரித்துள்ளதாக ஏற்றுமதி மேம்பாட்டு சபை தெரிவித்துள்ளது.

இதன்படி 2023 ஜனவரியுடன் ஒப்பிடுகையில், விவசாய ஏற்றுமதிகள் 3.58 சதவீதம் அதிகரிப்பைக் காட்டியுள்ளது.

தேயிலை, இறப்பர் மற்றும் இறப்பர் பொருட்கள், தேங்காய் அடிப்படையிலான பொருட்கள் நேர்மறையான வளர்ச்சியைக் காட்டுகின்றன என ஏற்றுமதி மேம்பாட்டு சபை தெரிவித்துள்ளது.

இருப்பினும், 2024 ஜனவரியில் இலங்கையின் மொத்த ஏற்றுமதி வருமானம் கடந்தாண்டு இதே மாதத்துடன் ஒப்பிடும்போது 0.77% சரிவைக் குறிக்கிறது என்றும் ஏற்றுமதி மேம்பாட்டு சபை தெரிவித்துள்ளது.

Exit mobile version