தொடர்ந்து உயர்ந்து வந்த இலங்கை ரூபாவின் பெறுமதியில் மாற்றம்

tamilnih 107

தொடர்ந்து உயர்ந்து வந்த இலங்கை ரூபாவின் பெறுமதியில் மாற்றம்

நேற்றுடன் ஒப்பிடும் போது இன்றையதினம்(30.01.2024) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி தளம்பல் நிலையை அடைந்துள்ளது.

இதேவேளை, அமெரிக்க டொலரின் விற்பனை பெறுமதி வீழ்ச்சி அடைந்துள்ளதுடன் கொள்வனவு பெறுமதி உயர்வடைந்துள்ளது.

இந்தநிலையில், இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய (30.01.2024) நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 322.73 ரூபாவாகவும், கொள்வனவு விலை 312.81 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

மேலும், கனேடிய டொலரின் விற்பனை விலை 242.20 ரூபாவாகவும், கொள்வனவு விலை 231.73 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

இதன்படி, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 351.29 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 337.22 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

அதேசமயம், ஸ்டெர்லிங் பவுண்டின் இன்றைய விற்பனை பெறுமதி 411.73 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 396.19 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

மேலும், கடந்த இரு வாரங்களாக வெளிநாட்டு நாணயங்கள் பலவற்றிற்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்ந்து உயர்ந்து வந்தமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version