வலுவடைந்து வரும் இலங்கை ரூபாவின் பெறுமதி!
அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதியில் கடந்த வாரம் ஏற்பட்ட மாற்றம் தொடர்பில் இலங்கை மத்திய வங்கி தகவல் வெளியிட்டுள்ளது.
இதன்படி, நேற்றுடன் நிறைவடைந்த வாரத்தின் படி, அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபா மேலும் வலுவடைந்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
அதற்கமைய, இலங்கை ரூபாவுக்கு நிகரான அமெரிக்க டொலரின் பெறுமதி 12.8 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது.
குறித்த காலப்பகுதியில் இலங்கை ரூபாவுக்கு நிகரான இந்தியா ரூபா 13.2 சதவீதத்தாலும் வீழ்ச்சியடைந்துள்ளது.
ஜப்பானிய யென் 23.8 சதவீதத்தினாலும், ஸ்ரேலிங் பவுண் 6.5 சதவீதத்தினாலும், யூரோ 10.4 சதவீதத்தினாலும் வீழ்ச்சியடைந்துள்ளதாக மத்திய வங்கியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Leave a comment