இலங்கை ரூபாவின் பெறுமதியில் வேகமான வளர்ச்சி

24 660babcb5421f

இலங்கை ரூபாவின் பெறுமதியில் வேகமான வளர்ச்சி

நேற்றுடன் ஒப்பிடும் போது இன்றையதினம்(02.04.2024) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் உயர்வடைந்துள்ளதுடன் டொலரின் பெறுமதியில் தொடர்ந்தும் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

இந்தநிலையில், இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய (02.04.2024) நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 304.90 ரூபாவாகவும், கொள்வனவு விலை 295.20 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

மேலும், கனேடிய டொலரின் விற்பனை விலை 225.85 ரூபாவாகவும், கொள்வனவு விலை 216.11 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

இதன்படி, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 328.74 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 315.32 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

அதேசமயம், ஸ்டெர்லிங் பவுண்டின் இன்றைய விற்பனை பெறுமதி 383.88 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 369.00 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

Exit mobile version