24 669840fa64b2e
இலங்கைசெய்திகள்

நாட்டை விட்டு வெளியேறிய வைத்தியர்கள்: சுகாதார அமைச்சர் தகவல்

Share

நாட்டை விட்டு வெளியேறிய வைத்தியர்கள்: சுகாதார அமைச்சர் தகவல்

1300 வைத்தியர்களும் 500இற்கும் மேற்பட்ட தாதியர்களும் இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர் என்று சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரண (Ramesh Pathirana) தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்துக்கு (Jaffna) நேற்று (17.07.2024) விஜயம் மேற்கொண்டிருந்த சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரண, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ‘உதயன்’ குழுமத் தலைவருமான ஈஸ்வரவாதம் சரவணபவனைச் சந்தித்துக் கலந்துரையாடும்போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

“தற்போது இலங்கையில் 24 ஆயிரம் அரச வைத்தியர்கள் இருக்கின்றார்கள். வெகுவிரைவில் 3 ஆயிரத்து 500 பேர் வைத்தியர்களாக வெளியேறவுள்ள நிலையில், அவர்களுக்கான வைத்தியர் நியமனங்களை வெகுவிரைவில் வழங்கவுள்ளோம்.

ஒவ்வொரு ஆண்டும் 3 ஆயிரம் பேர் வைத்தியர்களாக வெளியேறுகின்றனர். இதனால் அரச வைத்தியசாலையில் நிலவும் வைத்தியர் வெற்றிடங்களை நிரப்பக் கூடியதாக இருக்கின்றது.

தற்போது 24 ஆயிரம் வைத்தியர்கள் அரச வைத்தியசாலைகளில் பணிபுரிகின்றனர். எனினும், தற்போது துறைசார்ந்த வைத்திய நிபுணர்கள் நாட்டைவிட்டு வெளியேறியமை பெரும் பிரச்சினையாகக் காணப்படுகின்றது.

துறைசார்ந்த வைத்திய நிபுணர்களின் பற்றாக்குறை காரணமாக நாட்டின் சில இடங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

எனினும், கடந்த சில மாதங்களில் நாட்டை விட்டு வெளியேறிய 10 – 15 வரையிலான வைத்தியர்கள் நாட்டுக்கு மீளவும் வருகை தந்து மீண்டும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இது எமக்கு நல்ல ஆரோக்கியமான விடயமாக அமைந்திருக்கின்றது” என கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
1769590369 images 18
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சாவகச்சேரி இராணுவ முகாமில் துப்பாக்கிச் சூடு: சிப்பாய் தன்னைத்தானே சுட்டு தற்கொலை முயற்சி!

யாழ்ப்பாணம், சாவகச்சேரி பகுதியில் அமைந்துள்ள இராணுவ முகாமில் இராணுவச் சிப்பாய் ஒருவர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டதில்...

Kassapa Thera
செய்திகள்இலங்கைபிராந்தியம்

திருகோணமலை கடற்கரை ஆக்கிரமிப்பு: பலாங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 10 பேரின் விளக்கமறியல் நீடிப்பு!

திருகோணமலை டச்பே (Dutch Bay) கடற்கரைப் பகுதியில் சட்டவிரோத நிர்மாணங்களை மேற்கொண்டு புத்தர் சிலையை வைத்ததாகக்...

ed1ef740 7f31 11f0 ab3e bd52082cd0ae.jpg
செய்திகள்அரசியல்இலங்கை

ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக மார்ச் மாதம் குற்றப்பத்திரிகை: சட்டமா அதிபர் நீதிமன்றில் அதிரடி அறிவிப்பு!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராகப் பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் தொடரப்பட்டுள்ள வழக்கில், வரும்...