20 9
இலங்கைசெய்திகள்

மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்ட வைத்தியர்…!

Share

மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்ட வைத்தியர்…!

அனுராதபுரம் பகுதியில் வைத்தியரொருவர் தவறான முடிவெடுத்து தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த சடலமானது இன்று (12.8.2024) அனுராதபுரம் (anuradhapura) – ஹொரவ்பொத்தானை காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதியில் மீட்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மீட்கப்பட்டவர் கெப்பித்திக்கொள்ளாவ சுகாதார வைத்திய அதிகாரியாக கடமையாற்றி வரும் சாமர சதுரங்க (38வயது) எனவும் தெரிய வந்துள்ளது.

சம்பவம் குறித்து தெரிய வருவதாவது, வைத்தியரின் மனைவி தமுத்தேகம வைத்தியசாலையில் தாதியராக கடமை ஆற்றி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், ஹொரவ்பொத்தானை காவல் பிரிவிற்குட்பட்ட மொரகேவ பகுதியில் மனைவியின் தாயாரின் வீட்டில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் ஆரம்ப கட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.

உயிரிழந்த வைத்தியரின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல உள்ளதாகவும் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் ஹொரவ்பொத்தானை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...