நாடு முழுவதும் சமீபத்திய நாட்களில் ஏற்பட்ட மிக மோசமான வானிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 627 ஆக உயர்ந்துள்ளதாக பேரிடர் மேலாண்மை மையம் (DMC) இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மீட்பு மற்றும் தேடுதல் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், மேலும் 190 பேர் காணாமல் போயுள்ளனர்.
மோசமான வானிலை நாட்டின் 25 மாவட்டங்களையும் பாதித்துள்ளது. இதனால் 611,530 குடும்பங்களைச் சேர்ந்த 2,179,138 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ தரவுகள் தெரிவிக்கின்றன.
மாவட்டங்கள் ரீதியில், கண்டி மாவட்டத்தில் இதுவரை 232 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவே அனர்த்தத்தால் பதிவான அதிக எண்ணிக்கையிலான உயிரிழப்புகள் கொண்ட மாவட்டமாக உள்ளது.