Cupboardல் நின்று விஜய் பாடி செம ஹிட்டடித்த பாடல்.. எது தெரியுமா, பிரபலமே சொன்ன தகவல்

25 683026fa3b07e 1

நடிகர் விஜய் திரைப்பயணத்தில் ரசிகர்களால் பெரிய அளவில் கொண்டாடப்பட்ட படங்களில் ஒன்று சச்சின்.

ஜான் மகேந்திரன் இயக்கத்தில் கடந்த 2005ம் வெளியான இந்த படத்தில் விஜய்யுடன் ஜெனிலியா, வடிவேலு என பலர் நடித்திருந்தனர்.

இப்படம் சமீபத்தில் கூட ரீ-ரிலீஸ் ஆக ரசிகர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர், பாக்ஸ் ஆபிஸிலும் கலக்கியது.

ரசிகர்களால் கொண்டாடப்பட்ட இந்த படத்தில் நடிகர் விஜய் ஒரு பாடல் பாடியிருந்தார்.

தேவி ஸ்ரீ பிரசாந்த் இசையமைப்பில் விஜய் வாடி வாடி என்ற பாடலை பாடியிருந்தார், செம ஹிட்டான பாடல் அது. இந்த பாடல் உருவான விதம் குறித்து இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் ஒரு நிகழ்ச்சியில் கூறியுள்ளார்.

அதில் அவர், விஜய் சாரின் குரல் எனக்கு பிடிக்கும். அவரது குரலை ரெக்கார்ட் செய்யலாம் என எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு அவர் வீட்டிற்கே சென்றோம்.

அங்கே சென்றதும் இங்கே எப்படி ரெக்கார்ட் செய்வீர்கள் என கேட்டார், நான் ஏதாவது வாட்ரோப் மாதிரி இருக்கா என கேட்டு ஒரு செட்டப் செய்தோம்.

அவரது வீட்டின் பெட்ரூமில் ஒரு வாட்ரோப் இருந்தது அதில் எக்கோ வராமல் சில விஷயங்களை செய்து விஜய்யை பாட வைத்தோம்.

அவர் எந்த ஒரு மறுப்பும் செய்யாமல் கப்போர்ட் உள்ளேயே நின்று அழகாக பாடினார் என கூறியுள்ளார்.

Exit mobile version