பதவி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோனிடம் குறுக்கு விசாரணை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
தேசபந்து தென்னக்கோனின், தவறான நடத்தை மற்றும் கடுமையான அதிகார துஷ்பிரயோகம் சம்பந்தமாக விசாரணை நடத்த நியமிக்கப்பட்டுள்ள விசாரணைக் குழுவினால் இந்த குறுக்கு விசாரணை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, எதிர்வரும் 16ஆம் திகதி முதல் தேசபந்து தென்னக்கோனிடம் குறுக்கு விசாரணை நடத்தப்படும்.
இதேவேளை, இந்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் எதிர்வரும் 11ஆம் திகதி குற்றச்சாட்டுகள் தொடர்பாக வாய்மொழி சாட்சியங்களை அழைக்கவும் விசாரணைக் குழு முடிவு செய்துள்ளது.