தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் மீள் திருத்தப் பெறுபேறுகள் வெளியீடு!

25 67923813eda00

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் மீள் திருத்தப் பெறுபேறுகள் (Re-scrutiny Results) வெளியிடப்பட்டுள்ளதாகப் பரீட்சைகள் திணைக்களம் (Department of Examinations) அறிவித்துள்ளது.

இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ வலைத்தளங்களான www.doenets.lk அல்லது www.results.exams.gov.lk க்குச் சென்று, தேர்வு எண்ணை (Index Number) உள்ளிடுவதன் மூலம் முடிவுகளைப் பெற்றுக் கொள்ளலாம்.

பெறுபேறுகள் தொடர்பாக ஏதேனும் சந்தேகம் இருந்தால், இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் பின்வரும் தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்க முடியும்: 1911, 0112784208, 0112784537, 0112785922, 0112784422.

இந்த ஆண்டு நாடாளாவிய ரீதியில் புலமைப்பரிசில் பரீட்சை 2,787 பரீட்சை நிலையங்களில் நடைபெற்றது. இதில் 2,31,638 சிங்கள மொழி விண்ணப்பதாரர்கள் மற்றும் 76,313 தமிழ் மொழி விண்ணப்பதாரர்கள் உட்பட மொத்தம் 3,07,959 விண்ணப்பதாரர்கள் பரீட்சைக்குத் தோற்றியிருந்தனர்.

இதேவேளை, பல்கலைக்கழக மாணவர்கள் மஹாபொல புலமைப்பரிசில் திட்டத்திற்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாகப் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு (University Grants Commission – UGC) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, புலமைப்பரிசிலுக்கு விண்ணப்பிப்பவர்கள் எதிர்வரும் அக்டோபர் 31 ஆம் திகதி வரை விண்ணப்பிக்க முடியும் என UGC தெரிவித்துள்ளது.

Exit mobile version