tamilni 150 scaled
இலங்கைசெய்திகள்

கெஹலியவுக்கு எதிராக கொழும்பில் ஆர்பாட்டம்

Share

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புகவெல்லவை உடனடியாக கைதுசெய்ய கோரி சுகாதார அமைச்சுக்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சுக்கு முன்பாக இன்று(09.01.2023) இடம்பெற்ற குறித்த ஆர்ப்பாட்டத்தில், காலி முகத்திடல் போராட்ட செயற்பாட்டாளர்கள், சிவில் அமைப்பினர் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

கடந்த காலங்களில் நாட்டில் சுகாதார ரீதியான பிரச்சினைகளுக்கு அமைச்சர் என்ற வகையில் உரிய தீர்வை பெற்றுக்கொடுக்க தவறியதாகவும், இதன் காரணமாக அவர் உடனடியாக கைதுசெய்ப்படவேண்டும் எனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மேலும், நாட்டிற்கு கொண்டுவரபட்ட சட்டவிரோத மருந்து இறக்குமதியால் பல உயிர்கள் பலியானதாகவும், இதற்கு கெஹலிய ரம்புகவெல்லவே பொறுப்புக்கூறவேண்டும் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதற்கமைய ஆர்ப்பாட்டத்தை கட்டுப்படுத்த பொலிஸார் மற்றும் கலகத்தடுப்பு பிரிவினர் குவிக்கப்பட்டிருந்ததோடு நீர்த்தாரை பிரயோக வாகனமும் கொண்டுவரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
MediaFile 4 3
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கீரி சம்பாவை அதிக விலைக்கு விற்றமை மற்றும் ‘லங்கா பாஸ்மதி’ எனப் போலிப் பற்றுச்சீட்டு வழங்கிய கடைக்கு அபராதம்!

கீரி சம்பா அரிசியை நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு விற்றமை மற்றும் ‘லங்கா பாஸ்மதி’...

kajendrakumar
அரசியல்இலங்கைசெய்திகள்

சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட்ட சமஷ்டியை வலியுறுத்த த.தே.ம.மு குழுவினர் இவ்வாரம் சென்னை பயணம்!

தமிழ் மக்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வாக, தமிழர் தேசம், இறைமை மற்றும் சுயநிர்ணய உரிமை ஆகியவற்றை...

kajendrakumar
அரசியல்இலங்கைசெய்திகள்

25,000 ரூபாய் கொடுப்பனவு 50% பேருக்கு மேல் வழங்கப்பட்டுள்ளது – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ!

அனர்த்த நிலைமையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்கும் நடவடிக்கையில், தற்போது வழங்கப்படும் 25,000 ரூபாய் கொடுப்பனவானது...

images 4 4
இலங்கைசெய்திகள்

பாடசாலை மாணவியை கூட்டு வன்கொடுமை செய்த பாடசாலை மாணவன் உட்பட நால்வர் கந்தளாயில் கைது!

டிக்டொக் சமூக ஊடகம் மூலம் அறிமுகமான பாடசாலை மாணவி ஒருவரை, கந்தளாய் ஈச்சலம்பற்று கடற்கரைப் பகுதியில்...