டெல்லியில் கலால் துறை சோதனை: விலை உயர்ந்த போத்தல்களில் மலிவான மதுபானம் கலந்து விற்பனை – பறிமுதல் நடவடிக்கை!

20231220 MUM RS MN illegal liqour 004 0 1708007989972 1708008061043

டெல்லியின் கலால் துறை அதிகாரிகள் இன்று (நவம்பர் 03) நரேலா பகுதியில் உள்ள பல மதுபானசாலைகளில் திடீர்ச் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்ததாக அந்நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மதுபானங்கள் கலப்படம் செய்து விற்கப்படுவதாகக் கிடைத்த முறைப்பாடுகளை அடுத்தே இந்தச் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

சோதனை நடவடிக்கையின் போது, அதிகாரிகள் கலப்படம் செய்யப்பட்ட பல மதுபானப் போத்தல்களைப் பறிமுதல் செய்துள்ளதாக அறியப்படுகிறது.

சோதனையில், விலை உயர்ந்த மதுபானப் போத்தல்களில் மலிவான மதுபானம் மற்றும் தண்ணீர் கலந்து விற்பனை செய்துள்ளமை தெரியவந்துள்ளது.

இவ்வாறு சட்டவிரோதச் செயலில் ஈடுபட்ட மதுபானசாலைகள் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Exit mobile version