4 4
இலங்கைசெய்திகள்

கொள்கலன் விடுவிப்பில் தாமதம் : தயாசிறி ஜயசேகர குற்றச்சாட்டு

Share

கொழும்பு துறைமுகத்தில் கொள்கலன்கள் விடுவிப்பதில் கால தாமத நிலை உருவாகியுள்ளது என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

அண்மையில் சுமார் 323 கொள்கலன்கள் சர்ச்சைக்குரிய முறையில் விடுவிக்கப்பட்ட சம்பவத்தின் காரணமாக சுங்க அதிகாரிகள் அனைத்து கொள்கலன்களையும் கடுமையான சோதனைக்கு உட்படுத்தும் முடிவெடுத்துள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.

இதன் காணமாக இவ்வாறு கால தாமதம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

தற்பொழுது ஒவ்வொரு கொள்கலனையும் வெளியேற்ற குறைந்தது ஏழு மணிநேரம் பிடிக்கின்றது எனக் குறிப்பிட்டுள்ளார்.

இது முன்னர் வெறும் இரண்டு மணி நேரத்தில் முடிந்து வந்ததுடன் மிகுந்த வேகமான செயல்முறையாக இருந்தது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அண்மைய சர்ச்சைக்குப் பின் உயர் அதிகாரிகளிடம் இருந்து கடும் எச்சரிக்கைகளை பெற்ற சுங்க அதிகாரிகள் தற்போது தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர் என தெரிவித்துள்ளார்.

அரசு தரப்பினரின் அழுத்தங்களுக்கு அஞ்சாது செயற்படுமாறு சுங்க அதிகாரிகளை கோருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், விடுவிக்கப்பட்ட கொள்கலன்களில் வெடிபொருட்கள் இருக்கவில்லை என சுங்க அதிகாரி சீவலி அருக்கொட அண்மையில் வெளியிட்ட கருத்தை நிராகரிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

குறித்த கொள்கலன்கள் எவ்வாறு சோதனைக்கு உட்படுத்தப்படாது விடுவிக்கப்பட்டன என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

“இந்த ரெட் சேனல் ஒரு செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான கணினி முறை. இறக்குமதி வரலாறு உள்ளிட்ட காரணிகளைப் பார்த்து சந்தேகத்திற்குரிய போக்குவரத்துகளை அடையாளம் காண்கிறது. இந்த முறை ‘ரெட் சேனல்’ வழியாகச் செல்ல வேண்டுமெனக் கூறிய போதிலும், அதனை எவ்வாறு கடந்து வெளியேறியது என்பதற்கான பதில் தேவை” என அவர் வலியுறுத்தினார்.

இந்த விவகாரம் தொடர்பான உண்மைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வர வேண்டும் எனவும், தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் தயாசிறி ஜயசேகர கோரிக்கை விடுத்துள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
image 1200x800 47
செய்திகள்இந்தியா

டெல்லி AI உச்சி மாநாடு: கடைசி நேரத்தில் பின்வாங்கிய பில் கேட்ஸ்! – எப்ஸ்டீன் விவகார சர்ச்சை காரணமா?

டெல்லியில் நடைபெற்று வரும் ‘இந்திய செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சி மாநாட்டில்’ (India AI Impact...

image 1200x800 45
உலகம்செய்திகள்

பிரித்தானியாவில் அதிரடி! – ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்ட்சர் கைது; எப்ஸ்டீன் விவகாரத்தில் அரசு ரகசியங்களை கசியவிட்டாரா?

பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீனுடனான தொடர்புகள் மற்றும் பொது அலுவலகத்தில் தவறான நடத்தையில் ஈடுபட்டதாக எழுந்த...

image 1200x800 44
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தலைமன்னார் – இராமேஸ்வரம் கப்பல் சேவை மீண்டும்? – 310 மீட்டர் நீளத்தில் புதிய இறங்குதுறை அமைக்கத் திட்டம்!

இலங்கையையும் இந்தியாவையும் இணைக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க தலைமன்னார் இறங்குதுறையை (Jetty) நவீனமயமாக்குவதற்கான முதற்கட்ட மேம்பாட்டுத் திட்டம்...