24 4
இலங்கைசெய்திகள்

தரம் குறைந்த சவர்க்காரங்கள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்

Share

தரம் குறைந்த சவர்க்காரங்கள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்

சவர்க்காரங்கள் மற்றும் அழகுசாதனப் பொருட்களுக்கு SLS சான்றிதழ் கட்டாயமாக்குவதற்கு அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பிப்பதற்கு தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் டி.ஐ. உடுவரா தெரிவித்துள்ளார்.

இலங்கை தர நிர்ணய பணியகத்தின் பரிந்துரைகளின்படி, இலங்கை சந்தையில் விற்பனைக்குக் கிடைக்கும் சவர்க்காரங்களின் TFM பெறுமதி 78 ஆக இருக்க வேண்டும்.

எவ்வாறாயினும், நாட்டில் உள்ள பிரதான சவர்க்கார உற்பத்தி நிறுவனம் ஒன்றினால் தயாரிக்கப்பட்ட குழந்தைகளின் சவர்க்காரம் நுகர்வோர் விவகார அதிகாரசபை பரிசோதித்த போது அதன் TFM பெறுமதி 63 என கண்டறியப்பட்டுள்ளது.

இந்த நிறுவனமும் ஏனைய நிறுவனங்களும் நிர்ணயிக்கப்பட்ட TFM பெறுமதியுடன் சவர்க்கார உற்பத்தி செய்கின்றனவா என்பதை அவ்வப்போது பரிசோதிக்க நுகர்வோர் விவகார அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளது.

குழந்தையின் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் குறைந்த TFM மதிப்புடைய சவர்க்காரம் தயாரித்ததாக நீதிமன்றத்தால் குற்றம் நிரூபிக்கப்பட்ட நிறுவனத்தின் உற்பத்திக்கு நீதிமன்றம் தடை விதிக்க வாய்ப்பு இருப்பதாகவும் நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...