764 மற்றும் 769 ஆகிய வழித்தடங்களின் பேருந்து சேவைகளை காங்கேசன்துறை தொடருந்து நிலையத்திலிருந்து ஆரம்பிக்க வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் நேற்று (20.05.2025) எடுக்கப்பட்ட தீர்மானத்தில் எந்தவொரு மாற்றமும் இல்லை என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார் .
இந்தத் தீர்மானத்துக்கு அமைவாக பேருந்து சேவையை ஒழுங்குபடுத்தி கண்காணிப்பதாக யாழ்ப்பாண மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் ஆளுநர் செயலகக் கூட்டத்தில் உறுதியளித்திருந்தார்.
இந்தநிலையில் அதனைச் செயற்படுத்துமாறு பிரதிப் பொலிஸ்மா அதிபருக்கு தொலைபேசியூடாக ஆளுநர் அறிவுறுத்தியுள்ளார்.