ஓமந்தை விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered Recovered 3

யாழ். ஓமந்தை கார் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மூன்றாக அதிகரித்துள்ளது.

குறித்த விபத்தில் படுகாயமடைந்த நிலையில், யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த து. சுவாமிநாத ஐயர் (சந்திரன் ஐயா) என்பவரே நேற்றையதினம் வெள்ளிக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

வவுனியா ஓமந்தை பகுதியில் கடந்த 26ஆம் திகதி அதிகாலை கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த கார், எதிரே வந்த டிப்பருடன் மோதி விபத்துக்குள்ளானது.

குறித்த விபத்தில், யாழ்ப்பாணம் இந்திய துணை தூதரக அலுவலர் பிரம்மஸ்ரீ சச்சிதானந்த குருக்கள் பிரபாகரசர்மா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அவருடன் காரில் பயணித்த மனைவி, மகன் மற்றும் மைத்துனர் ஆகியோர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.

வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், பிரபாகரசர்மாவின் மகனான அக்ஷே கடந்த 1ஆம் திகதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில், பிரபாகரசர்மாவின் மைத்துனர் நேற்றையதினம்(20.06.2025) வெள்ளிக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

Exit mobile version