மோசமான வானிலை: உயிரிழந்தோர் எண்ணிக்கை 635 ஆக அதிகரிப்பு – 192 பேர் காணாமல் போயுள்ளனர்!

நாட்டில் சமீபத்திய நாட்களில் ஏற்பட்ட மிக மோசமான வானிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 635 ஆக உயர்ந்துள்ளதாகப் பேரிடர் மேலாண்மை மையம் (DMC) இன்று (திங்கட்கிழமை, டிசம்பர் 8) தெரிவித்துள்ளது. அத்துடன், 192 பேர் காணாமல் போயுள்ளனர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மீட்பு மற்றும் தேடுதல் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இந்த அனர்த்தங்களால் முழுமையாக 5,325 வீடுகளும், பகுதியளவில் 81,163 வீடுகளும் சேதமடைந்துள்ளன. பாதிக்கப்பட்டவர்கள் 690 பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அதில், 22,218 குடும்பங்களைச் சேர்ந்த 69,861 பேர் உள்ளனர்.

image d2a64af63e

Exit mobile version