சீரற்ற வானிலை காரணமாக நாட்டில் ஏற்பட்ட அனர்த்தங்களினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 481 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் (Disaster Management Centre – DMC) உறுதிப்படுத்தியுள்ளது.
சீரற்ற வானிலை காரணமா உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 481ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் உறுதிப்படுத்தியுள்ளது.
இதேவேளை சீரற்ற வானிலை காரணமாக காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 345 எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த காலநிலை காரணமாக 1,967 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதுடன் பகுதியளவில் 50,173 வீடுகள் சேதமடைந்துள்ளதென அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.