25 690253c5e39ee
அரசியல்இலங்கைசெய்திகள்

தேசிய மக்கள் சக்தி (NPP) உறுப்பினர் ஒருவருக்குக் கொலை மிரட்டல்! – போலீசார் விசாரணை தீவிரம்!

Share

ஹோமாகம பிரதேச சபையின் தவிசாளரும் தேசிய மக்கள் சக்தி (NPP) உறுப்பினருமான கசுன் ரத்நாயக்கவுக்கு “ஹந்தயா” (Handaya) எனத் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்ட ஒருவரால் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அவர் ஹோமாகம தலைமையகப் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாகப் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

தவிசாளர் கடந்த 27ஆம் திகதி, நண்பகல் 12.33 அளவில் அலுவலகத்தில் “பொதுமக்கள் தினத்தை” நடத்திக்கொண்டிருந்தபோது, அலுவலக கைபேசி இலக்கத்திற்கு இந்த அச்சுறுத்தல் அழைப்பு வந்துள்ளது.
“ஹந்தயா” என்று அழைத்த நபர், “உனக்கு சனாவுக்கு நடந்ததை தெரியுமல்லவா?” என்று கூறி மரண அச்சுறுத்தல் விடுத்ததாக, தலைவர் கடந்த 28ஆம் திகதி பொலிஸில் சமர்ப்பித்த முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாகச் சபைத் தவிசாளர் மற்றும் சபைச் செயலாளர் ஆகியோரிடமிருந்து வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மேலும், இந்த அச்சுறுத்தல் அழைப்பு சாதாரண தொலைபேசி அழைப்பு மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அச்சுறுத்தல் விடுத்தவர், தவறுதலாக அழைப்பு விடுத்திருக்கலாம் என தெரிவித்துள்ள, உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர், இது குறித்து நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பித்து, தொலைபேசி பகுப்பாய்வு அறிக்கைகளைக் கோரி, மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.
ஹோமாகம தலைமையகப் பொலிஸார் இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share
தொடர்புடையது
25 69035b0d8bf92
இலங்கைஏனையவைசெய்திகள்

அவுஸ்திரேலியாவில் இலங்கை பௌத்த பிக்குக்கு சிறைத்தண்டனை விதிப்பு

அவுஸ்திரேயாவில் இலங்கையை சேர்ந்த பௌத்த துறவி ஒருவர் சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் குற்றவாளியாக...

25 690304e16a39e
அரசியல்இலங்கைசெய்திகள்

பாதுகாப்பு அச்சுறுத்தல்: ஆயுதம் கோரிய நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா

யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதன், வெளிநாட்டிலிருந்து தற்காப்புக்காக மூன்று ஆபத்தான மிளகு ஸ்ப்ரேக்கள்...

25 690332f7d691e
இலங்கைஉலகம்செய்திகள்

கனடாவில் நிரந்தர குடியுரிமை பெற இருப்பவர்களுக்கு வெளியான மகிழ்ச்சித் தகவல்

2025 ஒக்டோபர் 27 ஆம் திகதி, கனடா அரசாங்கம் தனது Express Entry அமைப்பின் மாகாண...

25 690349f3051fc
அரசியல்இலங்கைசெய்திகள்

நாடாளுமன்றில் கேலிக்கூத்து நடக்கிறது; வயது முதிர்ந்த ரணிலை விடுங்கள் – டயானா கமகே

ஐக்கிய தேசியக் கட்சியின் தற்போதைய தலைவர் கட்சிக்குள் இளைஞர்களை சேர்த்துக் கொண்டு அவர்களுக்கு தலைமைப் பதவியை...