7 22
இலங்கைசெய்திகள்

யாழில் மனிதர்களுக்கு சமமாக நாய்க்கும் மரணச் சடங்கு!

Share

யாழில் மனிதர்களுக்கு சமமாக நாய்க்கும் மரணச் சடங்கு!

மனிதர்களுக்கு இறுதிச் சடங்கினை செய்வது போல வளர்ப்பு நாய்க்கும் இறுதி சடங்கினை செய்தமை நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சம்பவமானது நேற்றையதினம் (15) யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை, மாவடி பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், பைசா என்று அழைக்கப்படும் ரொட்வீலர் இன நாயானது கடந்த 20.08.2006 அன்று பிறந்துள்ளது.

இந்நிலையில் தனது 18வயதை தாண்டிய பைசா நேற்று முன்தினம் (2024.09.14) உயிரிழந்தது.

இறுதிச் சடங்கினை செய்தவர் கடந்த 10 வருடங்களாக பைசாவினை வளர்த்து வந்துள்ளார்.

கடந்த 10 வருடங்களாக தனக்கு பாதுகாப்பினை வழங்கிய நன்றிக் கடனுக்காக மனிதர்களுக்கு செய்கின்ற இறுதிச் சடங்கு போல பைசாவுக்கும் நேற்றையதினம் இறுதிச் சடங்கினை நடாத்தி நெகிழ வைத்துள்ளார்.

பான்ட் வாத்தியங்கள் முழங்க, பைசாவின் உடலம் வட்டுக்கோட்டை பகுதி எங்கும் இறுதி ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.

அதன்பின்னர் பைசாவின் எசமானின் காணியில் உடலமானது நல்லடக்கம் செய்யப்பட்டது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...