24 663449b35d120
இலங்கைசெய்திகள்

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளில் சடலம் மீட்பு

Share

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளில் சடலம் மீட்பு

அனுராதபுரம் – கல்கிரியாகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வீதிக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளில் ஆண் ஒருவரின் சடலம் நேற்று முன்தினம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.

நெல்லியாகம, பலகல, கல்கிரியாகம என்ற இடத்தில் வசித்து வந்த வஹாப்தீன் அமீன் முனவ்பர் என்ற 50 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய, இந்த மரணம் தொடர்பான உண்மைகள் கெக்கிராவ நீதவான் நீதிமன்றில் அறிவிக்கப்பட்டது.

அத்துடன், நீதவான் விசாரணைகளை மேற்கொண்டு, சடலம் தொடர்பான பிரேத பரிசோதனையை மேற்கொள்ளுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த உத்தரவிற்கமைய, தம்புள்ளை ஆதார வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி பிரேத பரிசோதனையை மேற்கொண்டு மரணத்திற்கான காரணம் மாரடைப்பு என குறிப்பிட்டுள்ளார்.

கல்கிரியாகம பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் ருக்மல் ரத்நாயக்கவின் பணிப்புரையின் பேரில் அதிகாரிகள் குழுவொன்று மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளது.

Share
தொடர்புடையது
30 3
செய்திகள்உலகம்

ஈரான் மீது அதிரடித் தாக்குதல்: பென்டகனின் உச்சகட்ட எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் தீவிரமடைந்துள்ள நிலையில், ஈரான் மீதான வான்வழித் தாக்குதல்களை முன்னெப்போதும்...

29 3
செய்திகள்உலகம்

ஈராக் வான்வெளியைப் போர்க்களமாக மாற்ற வேண்டாம்: அமெரிக்க வெளியுறவு அமைச்சரிடம் பிரதமர் அல்-சூடானி வலியுறுத்தல்!

மேற்காசிய பிராந்தியத்தில் போர்ச் சூழல் தீவிரமடைந்து வரும் நிலையில், ஈராக் பிரதமர் முகமது ஷியா அல்-சூடானி,...

28 3
உலகம்செய்திகள்

பாகிஸ்தானில் 5ஜி அலைக்கற்றை ஏலம்: 50.7 கோடி டொலர் வருவாய் ஈட்டப்பட்டது!

பாகிஸ்தானில் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட 5ஜி அலைக்கற்றை ஏலம் இன்று (மார்ச் 10, 2026) இஸ்லாமாபாத்தில் வெற்றிகரமாக...

27 3
செய்திகள்விளையாட்டு

ஐபிஎல் 2026: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய ஜெர்சி அறிமுகம் – பயிற்சியில் ஈடுபட்ட தோனி!

ஐபிஎல் 2026 தொடருக்கான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி தனது...