24 668cf2cb5e4cc
இலங்கைசெய்திகள்

ஐயாயிரம் தந்தால் மட்டுமே பரீட்சை பெறுபேறு: கிளிநொச்சியில் மாணவனிடம் டீல்

Share

ஐயாயிரம் தந்தால் மட்டுமே பரீட்சை பெறுபேறு: கிளிநொச்சியில் மாணவனிடம் டீல்

கிளிநொச்சி (Kilinochchi) மத்திய மகா வித்தியாலயத்தை சேர்ந்த பழைய மாணவன் ஒருவரிடம் 5,000 ரூபா தந்தால் மட்டுமே பரீட்சை பெறுபேற்றுப் பத்திரத்தை வழங்க முடியுமென பாடசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயத்தை சேர்ந்த பழைய மாணவன் தனது க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேற்றுப் பத்திரத்தை கல்லூரியில் பெறச்சென்றுள்ளார்.

இந்நிலையில், குறித்த பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்தின் ஆயுட்காலச் சந்தாவாக ரூபா 5,000 செலுத்தி உறுப்பினராகினால் மட்டுமே பரீட்சை பெறுபேற்றுப் பத்திரத்தை வழங்க முடியுமென பாடசாலை நிர்வாகித்தனர் அவரிடம் கூறியுள்ளனர்.

இது தொடர்பில், குறித்த பாடசாலையின் அதிபர் பூலோகராஜாவை தொடர்புகொண்டு வினவியவேளை, குற்றச்சாட்டை மூடிமறைக்கும் விதத்தில் பதில் வழங்கியுள்ளார்.

இந்நிலையில், இது தொடர்பில் கிளிநொச்சி வலயக்கல்விப் பணிப்பாளர் காயத்திரியை தொடர்பு கொண்டு வினவிய போது, சமூக ஊடகங்களில் இந்த பிரச்சினை குறித்து பதிவுகள் உள்ளதை தான் பார்த்ததாகவும், இது குறித்து விசாரணை மேற்கொள்வதாகவும் கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
20 14
செய்திகள்இலங்கைபிராந்தியம்

2027ஆம் ஆண்டில் முன்பள்ளிகளுக்கான புதிய பாடத்திட்டம்: பிரதமர் ஹரிணி அமரசூரிய அறிவிப்பு

2027ஆம் ஆண்டிலிருந்து முன்பள்ளிகளுக்கான புதிய தேசிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்றும், அதற்கேற்ப ஆசிரியர்களுக்கு முறையான பயிற்சிகள்...

19 12
செய்திகள்அரசியல்இலங்கை

பாதெனிய – அனுராதபுரம் பிரதான வீதியில் விபத்து: அமைச்சர் ஆனந்த விஜேபாலவின் சகோதரர் உயிரிழப்பு!

பாதெனிய – அனுராதபுரம் பிரதான வீதியின் மஹகல்கடவல பகுதியில் இன்று (மார்ச் 15) இடம்பெற்ற சாலை...

18 13
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தகவல் தொழில்நுட்ப யுகத்தில் ஊடகப் பொறுப்புணர்வு: பிரதமர் ஹரிணி அமரசூரியவின் வலியுறுத்தல்

தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகங்களின் வளர்ச்சி, தகவல்களை ஜனநாயகப்படுத்தியுள்ள அதேவேளையில், அவற்றின் உண்மைத்தன்மை மற்றும்...

17 14
செய்திகள்அரசியல்இலங்கை

அசோக ரன்வலவுக்கு எதிராக மஹர நீதிமன்றம் பிடியாணை பிறப்பிப்பு

தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் சபாநாயகருமான அசோக ரன்வலவுக்கு எதிராக மஹர நீதவான்...