tamilni 358 scaled
இலங்கைசெய்திகள்

வெளிநாடொன்றில் உயிரிழந்த கிளிநொச்சி குடும்பஸ்தரின் இறுதிக்கிரியைகள்

Share

வெளிநாடொன்றில் உயிரிழந்த கிளிநொச்சி குடும்பஸ்தரின் இறுதிக்கிரியைகள்

பெலாரஸ் நாட்டின் எல்லையில் சடலமாக மீட்கப்பட்ட வட்டக்கச்சியைச் சேர்ந்த இளம் குடும்பத்தரின் இறுதிச் சடங்கு இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளது.

பிரான்சிற்கு செல்வதற்கு சட்டவிரோத முகவர் ஒருவரை நம்பி சென்ற கிளிநொச்சி, வட்டக்கச்சி பிரதேசத்தை சேர்ந்த ஒருவர் பெலாரஸ் நாட்டின் எல்லையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக அவரது உறவினர்களால் தெரிவிக்கப்பட்டிருந்தது.

கிளிநொச்சி – வட்டக்கச்சி மாயவனூர் பகுதியைச் சேர்ந்த பாலசிங்கம் யுகதீபன் என்ற 40 வயதுடைய ஐந்து பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு சடலமாக அந்நாட்டு இராணுவத்தினரால் மீட்கப்பட்டிருந்தார்.

கடந்த 09.10.2023 அன்று சடலமாக மீட்கப்பட்ட குறித்த நபரது உடலம் நேற்று முன்தினம்(17) சனிக்கிழமை நாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.

நேற்று(18) திங்கட்கிழமை நள்ளிரவு வட்டக்கச்சியில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டுவரப்பட்ட நிலையில் இன்று(19) செவ்வாய்க்கிழமை இறுதி கிரியைகள் நடைப்பெற்றுள்ளது.

பிரான்ஸ் நாட்டுக்கு செல்வதற்கு சட்டவிரோத முகவர் ஒருவரை நம்பி விமானம் மூலம் ரஷ்யா சென்று அங்கிருந்து பெலராஸ், போலந்து, ஜேர்மன் ஊடாக பிரான்ஸ் செல்வதற்காக பெலராஸிலிருந்து போலந்துக்கு சுமார் 700 கிலோ மீற்றர் தூரத்தை நடந்து கடப்பதற்காக ஏழு பேர் கொண்ட குழுவுடன் சென்ற போது உடல் நிலை பாதிக்கப்பட்டு பெலராஸ் எல்லையில் சடலமாக மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

ஏனையவர்கள் இவரை விட்டுவிட்டு சென்றுவிட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பெலராஸ் எல்லையில் இருந்து சில கிலோ மீற்றர்கள் தொலைவில் கடந்த (07.10.2023) ஆம் திகதி உடல் நிலை பாதிக்கப்பட்ட நிலையில் வட்டக்கச்சியில் உள்ள மனைவியை தொடர்பு கொண்டு தன்னால் நடக்க முடியாதுள்ளது என்றும் தன்னை யாரேனும் காப்பாற்றினால் அன்றி உயிர் தப்ப வேறு வழியில்லை என்றும் தெரிவித்தாக உறவினர்கள் தெரிவித்திருந்தனர்.

அதுவே அவர் இறுதியாக தொடர்பு கொண்டு பேசியது என்றும் உறவினர்கள் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 19
இலங்கைசெய்திகள்

கஹவத்தையில் கடும் பதற்றம்! பொதுமக்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தும் பொலிஸார்

கஹவத்தையில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு கடும் பதற்றமான சூழல்...

Murder Recovered Recovered Recovered 17
இலங்கைசெய்திகள்

எமக்கு தொடர்பில்லை! செம்மணி அவலத்தில் இருந்து பொறுப்பு துறக்கும் அமைச்சர்

செம்மணி புதைகுழி சம்பவங்களுக்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...