பாணந்துறையில் வீடொன்றுக்குள் ஆண், பெண்ணின் சடலங்கள் மீட்பு

29 7

பாணந்துறையில் வீடொன்றுக்குள் ஆண், பெண்ணின் சடலங்கள் மீட்பு

பாணந்துறையில் வீடொன்றில் இருந்து இருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கல்கொட ஸ்ரீ மகா விகாரை வீதியிலுள்ள வீடொன்றில் ஆண் மற்றும் பெண் ஆகியோரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த பெண்ணின் சடலம் வீட்டின் முன் அறையிலும் ஆணின் சடலம் வீட்டின் அறையில் தொங்கிய நிலையில் காணப்பட்டதாகவும் பாணந்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

47 வயதுடைய ஆணும் 42 வயதுடைய பெண்ணும் உயிரிழந்துள்ளனர்.

இருவரும் முறைசாரா உறவில் ஈடுபட்டுள்ள தம்பதிகள் என தகவல் வெளியாகியுள்ளது. அந்த நபர் பெண்ணை கொலை செய்து விட்டு உயிரை மாய்த்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பாணந்துறை குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version