சௌபாக்கியா பற்றிக் நிலையம் தயாசிறியால் திறப்பு!!

VideoCapture 20220220 095653 1

சௌபாக்கியா பற்றிக் உள்ளூர் உற்பத்தி விற்பனை நிலையம் இராஜாங்க அமைச்சர்‌ தயாசிறி ஜயசேகரவினால் இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் திறந்து வைக்கபட்டுள்ளது.

ஜனாதிபதியின் “சுபீட்சத்தின் நோக்கு” கொள்கைத்திட்டத்தின் படி நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுத் தலைவருமான அங்கஜன் இராமநாதனின் ” என் கனவு யாழ்” எண்ணக்கருவில் குறித்த விற்பனை நிலையம் உருவாக்கப்பட்டுள்ளது.

இன்று காலை இடம்பெற்ற திறப்பு விழா நிகழ்வில் பற்றிக்‌, கைத்தறி துணிகள்‌ மற்றும்‌ உள்நாட்டு ஆடை உற்பத்தி இராஜாங்க அமைச்சர்‌ தயாசிறி ஜயசேகர பிரதம விருந்தினராக கலந்துகொண்டு விற்பனை நிலையத்தினை திறந்து வைத்துள்ளார்.

நிகழ்வில் நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளர் அங்கஜன் இராமநாதனின், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன், யாழ்ப்பாணம் பிரதேச செயலாளர் எஸ்.சுதர்சன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

#SrilankaNews

 

Exit mobile version