தயாசிறியின் அதிரடி அறிவிப்பு

rtjy 336

புதிய அரசியல் பயணத்தை ஆரம்பிக்கத் தான் தயார் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் பதவியிலிருந்து அண்மையில் நீக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

அத்துடன், நாட்டுக்குப் புதிய அரசியல் இயக்கமொன்றின் தேவை எழுந்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும், அரசியலில் எந்த ஏமாற்றமும் தனக்கு இல்லை என்றும், தான் சில பிரச்சினைகளை மாத்திரம் எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்தநிலையில், தனது போராட்டம் கைவிடப்படவில்லை என்றும், தான் இன்னும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலே இருக்கின்றார் என்றும் தயாசிறி எம்.பி. தெரிவித்தார்.

சில கட்சிகள் தன்னுடன் பேச்சில் ஈடுப்பட்ட போதும் தான் அந்தக் கட்சிகளில் எதிலும் இணைவதற்குத் தயார் இல்லை என்றும், புதிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் அவர் மேலும் கூறினார்.

Exit mobile version