தனியார் மயமாகும் நெடுஞ்சாலைகளின் தினசரி செயற்பாடுகள்

24 660a29d4bc8c2

தனியார் மயமாகும் நெடுஞ்சாலைகளின் தினசரி செயற்பாடுகள்

இன்று (01) முதல் முறையான முகாமைத்துவ உடன்படிக்கையின் கீழ் நெடுஞ்சாலைகளின் தினசரி செயற்பாடுகள் மற்றும் முகாமைத்துவம் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

வீதி அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் தனியார் துறையினர் இணைந்து நடத்திய சட்ட மற்றும் நிதி சாத்தியக்கூறு ஆய்வின் பின்னர், சம்பந்தப்பட்ட அனைத்து சொத்துக்களும் ஆறு மாதங்களுக்குள் அவர்களுக்கு மாற்றப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தனவினால் (Bandula Gunawardena) கடந்த 25 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

அதிவேக நெடுஞ்சாலை வலையமைப்பு, அதிவேக நெடுஞ்சாலைக்கு சொந்தமான நிலம் மற்றும் அதனுடன் தொடர்புடைய ஊழியர்களை வர்த்தக ரீதியாக நிர்வகிக்கும் வகையில் வீதி அபிவிருத்தி அதிகார சபையை பிரித்து சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு மாற்றுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version