rtjy 162 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கையில் மிகவும் ஆபத்தான நபர்: அதிர்ச்சித் தகவல்

Share

இலங்கையில் மிகவும் ஆபத்தான நபர்: அதிர்ச்சித் தகவல்

இலங்கையில் மிகவும் ஆபத்தான நபராக அறிவிக்கப்பட்டுள்ள கணேமுல்ல சஞ்சீவ கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

கணேமுல்ல சஞ்சீவ தனது அடியாட்களை பயன்படுத்தி 39 கொலைகளை செய்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சில காலம் சிறையில் இருந்த கணேமுல்ல சஞ்சீவ 2021ஆம் ஆண்டு பிணையில் வெளிவந்து இரகசியமாக வெளிநாடு சென்றதாகவும், வெளிநாடு சென்று 2 வருடங்களில் 17 கொலைகளை செய்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

மனிதக் கொலைகள் மட்டுமின்றி பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல், கப்பம் பெறுதல், கொள்ளை மற்றும் பல குற்றச்செயல்கள் இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த பாதாள உலக தலைவரின் கொலைகள் மற்றும் ஏனைய குற்றச்செயல்கள் தொடர்பில் பொலிஸார் தனியான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

கனேமுல்ல சஞ்சீவ போலி வெளிநாட்டு கடவுச்சீட்டில் இலங்கைக்குள் நுழைய முயன்ற போது கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
22 10
இலங்கைசெய்திகள்

இலங்கை வரலாற்றில் நியமிக்கப்பட்ட முதல் பெண் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ..!

இலங்கை வரலாற்றில் முதல் முறையாக,நியமிக்கப்பட்ட பெண் பரீட்சைகள் ஆணையாளர் நாயகமான ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே(8H49KG)...

21 11
உலகம்செய்திகள்

பாகிஸ்தானுக்கு வெளிப்படையாக ஆதரவளிக்கும் நாடு : கடுப்பில் இந்தியா

துருக்கி (turkey), வெளிப்படையாக தனது பாகிஸ்தான் (pakistan) ஆதரவை தெரிவித்துள்ளது இந்தியாவிற்கு (india) சினத்தை ஏற்படுத்தியுள்ளது....

20 16
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் அணு உலைகளில் கசிவு ஏற்பட்டதா..! வெளியானது புதிய தகவல்

பாகிஸ்தானில் உள்ள எந்த ஓர் அணு உலையில் இருந்தும் கதிர்வீச்சு கசிவு இல்லை என்று உலகளாவிய...

19 16
இலங்கைசெய்திகள்

அதிகரிக்கப்போகும் மின் கட்டணம் : அபாய அறிவிப்பை வெளியிட்ட முன்னாள் எம்.பி

அநுர அரசாங்கம் எதிர்காலத்தில் மின்சாரக் கட்டணத்தை 25% முதல் 30% வரை அதிகரிக்கத் தயாராகி வருவதாகவும்,...