அதிகரித்த இ.போ. சபையின் நாளாந்த வருமானம்!
இ.போ. சபையின் நாளாந்த வருமானம் 158 மில்லியன் ரூபா வரை அதிகரித்துள்ளதாக குறித்த சபையின் தலைவர் லலித் டி அல்விஸ் தெரிவித்துள்ளார்.
மேலும் நாளாந்தம் 12 இலட்சம் பயணிகள் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகளில் பயணிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, சுற்றிவளைப்புகள் அதிகரித்துள்ளமையினால், இலங்கை போக்குவரத்து சபையின் நாளாந்த வருமானம் அதிகரித்துள்ளதாகவும் இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Leave a comment