கொழும்பு – வத்தளை சாந்தி மாவத்தை பகுதியில் உள்ள வீடொன்றில் எரிவாயு சிலிண்டர் வெடித்து மிகப்பெரிய சேதம் ஏற்பட்டுள்ளது.
குறித்த வீடு தீயினால் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாகவும் குறித்த விபத்துக்காரணமாக உயிர் சேதம் எவையும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பு மாநகர சபையின் இரண்டு தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
நாட்டில் பல்வேறுபட்ட இடங்களில் குறித்த எரிவாயு அடுப்பு வெடிப்புச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதுடன் உயிரிழப்புச் சம்பவங்களும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#SriLankaNews